twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    முடிவுக்கு வரும் ஓபரா வின்பிரே 'டாக் ஷோ'

    By Staff
    |

    Oprah wtih Aishwarya Rai
    சிகாகோ: 25 ஆண்டுகளை நெருங்கியுள்ள ஓப்ரா வின்பிரே டாக் ஷோ 2011ம் ஆண்டுடன் முடிவுக்கு வருகிறது. தனது நிகழ்ச்சியை முடித்துக் கொள்ள வின்பிரே விரும்புவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

    இருப்பினும் தான் தொடங்கவுள்ள புதிய தொலைக்காட்சி நிறுவனம் மூலம் டாக் ஷோவை தொடர்ந்து நடத்தத் திட்டமிட்டுள்ளாராம் வின்பிரே.

    ஆரம்பத்தில் சிகாகோ என பெயரிடப்பட்டு வந்த ஓப்ரா வின்பிரே ஷோ, பின்னர் அதைத் தொகுத்து அளித்து, நடத்தி வந்த வின்பிரேவால் நிகழ்ச்சி பிரபலமானதைத் தொடர்ந்து ஓப்ரா வின்பிரே ஷோ என மாறியது.

    அமெரிக்காவின் ஏபிசி தொலைக்காட்சியில் 1986ம் ஆண்டு செப்டம்பர் 8ம் தேதி பகல் நேரத்தில் ஒளிபரப்பாகத் தொடங்கிய இந்த டாக் ஷோ உலகெங்கும் கோடிக்கணக்கான ரசிகர்களைப் பெற்றது. காரணம், வின்பிரே இந்த நிகழ்ச்சியை நடத்திய விதமும், அதன் பிரபலமும்.

    உல​கில் உள்ள 145 நாடு​க​ளில் இந் நிகழ்ச்சி ஒளி​ப​ரப்​பா​கி​றது. 55 வயதான ஓப்ரா வின்பிரே இந்த நிகழ்ச்சியால் பிரபலமடைந்ததைத் தொடர்ந்து உலகின் சக்தி வாய்ந்த பெண்கள் வரிசையில் முதல் 50 இடங்களுக்குள் தொடர்ந்து இடம் பெற ஆரம்பித்தார்.

    தற்போது இந்த நிகழ்ச்சி சில்வர் ஜூப்ளியை எட்டியுள்ளது. இதையடுத்து 2011ம் ஆண்டுடன் இந்த நிகழ்ச்சியை முடித்துக் கொள்வதாக அறிவித்துள்ளார் வின்பிரே. இதை அதிகாரப்பூர்வமாக ஏபிசி நிறுவனம் தற்போது அறிவித்துள்ளது.

    இதையடுத்து தனது குழுவினரை சந்தித்த வின்பிரே அவர்களுக்கு நன்றிகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொண்டார். இத்தனை காலமும் நீங்கள் கொடுத்த ஆதரவு மகத்தானது என்று கண்ணீர் மல்க அவர் தெரிவித்தாராம்.

    வின்பிரேவிந் நிறுவனமான ஹார்போ புரடக்ஷன் ஹவுஸ் நிறுவனத்தின் தலைவரான டிம் பென்னட் இதுகுறித்து கூறுகையில் 2011ம் ஆண்டுடான் ஓப்ரா ஷோ முடிவுக்கு வருகிறது. இதை தனது அடுத்த நிகழ்ச்சியில் வின்பிரே முறைப்படி அறிவிப்பார் என்றார்.

    இருப்பினும் வின்பிரே தொடங்கியுள்ள ஓன் (OWN -Oprah Winfrey Network) என்ற சொந்த தொலைக்காட்சியில் இது தொடரலாம் எனக் கூறப்படுகிறது. இருப்பினும் இதை டிம் மறுத்துள்ளார். ஓன் டிவியில் ஓப்ரா வின்பிரே ஷோ ஒளிபரப்பாகாது என்று அவர் தெரிவித்துள்ளார். இருப்பினும் வேறு பெயரில் இது வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X