'பெக்காம் முட்டை' விற்பனைக்கு!

இந்த வித்தியாசமான ஈஸ்டர் முட்டைகளில் இங்கிலாந்து கால்பந்து ஸ்டார் டேவிட் பெக்காம், அவரது மனைவியும், ஸ்பைஸ் கேர்ள் குழுவில் இடம் பெற்றுள்ளவருமான விக்டோரியா பெக்காம், இங்கிலாந்து இளவரசர் ஹாரி, பாப் பாடகி லில்லி ஆலன், பிரதமர் கார்டன் பிரவுன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இந்த வித்தியாசமான ஈஸ்டர் முட்டை சாக்லேட்டுகளுக்கு செம கிராக்கியாம். படு சூடாக விற்பனையாகி வருகிறதாம். இங்கிலாந்தின் பிரபல சாக்லேட் தயாரிப்பு நிறுவனமான தார்டான்ஸ் இந்த ஈஸ்டர் முட்டை சாக்லேட்டை தயாரித்துள்ளது.
இந்த விற்பனை மூலம் கிடைக்கும் பணம் முழுவதும் பர்னர்டாஸ் என்கிற குழந்தைகள் நல அறக்கட்டளைக்கு போகப் போகிறதாம். இதனால் இங்கிலாந்துக்காரர்கள் இதை தாராளமாக வாங்கி வருகிறார்கள்.
Comments


Click it and Unblock the Notifications