பரீடா-தேவ்: பப்பராஸிக்கு 'பெப்பே'!

ஸ்லம்டாக் மில்லியனர் மூலம் புகழ் பெற்ற தேவ் படேலும், ப்ரெய்டா பின்டோவும் காதலிப்பதாக செய்திகள் வருகின்றன. ஆனால் தங்களது காதலை படு கமுக்கமாக இருவரும் வைத்துள்ளனர்.
சமீபத்தில் நியூயார்க் ஹோட்டலில் இருவரும் ஜோடியாக ஒரு டின்னருக்குச் சென்றனர். இதை அறிந்த புகைப்படக்காரர்கள் அங்கு ஓடி வந்தனர். ஆனால் புகைப்படக்காரர்கள் வருவதை மோப்பம் பிடித்து விட்ட தேவ் ஜோடி தனித் தனியாக பிரிந்து விட்டது.
அதிலும் தேவ் படு வேகமாக எஸ்கேப் ஆகி விட்டாராம். இருநதாலும் அவர்கள் இருவரும் ஜோடி சேர்ந்து வந்ததை செய்தியாக்கி விட்டனர்.
19 வயதாகும் படேலும், 25 வயதாகும் ப்ரெய்டாவும் படு ஆழமாக காதலிப்பதாக கூறப்படுகிறது. இதை அனில் கபூரும் ஆஸ்கர் விருதுவிழாவில் பங்கேற்றபோது சூசகமாக தெரிவித்தார். இருவரும் நண்பகள் என்பதைத் தாண்டி நெருக்கமாக பழகுவதாகத் தெரிகிறது என்றார் கபூர்.
தேவ் தற்போது தி லாஸ்ட் ஏர்பென்டர் என்ற ஆங்கிலப் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். ப்ரெய்டா மாடலிங் மற்றும் ஹாலிவுட் சினிமாவில் பிசியாக இருக்கிறார்.
விரைவில் நாடோடிகள் இந்திப் படத்தில் தேவ் படேல் நடிக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications