ஜூலியா ராபர்ட்ஸ் குழந்தைளுக்கு இந்துக் கடவுள் பெயர்கள்

மகள் ஹேசலுக்கு லட்சுமி என்றும், மகன்கள் பின்னேயஸுக்கு கணேஷ் எனவும், ஹென்றிக்கு கிருஷ்ணன் பலராம் எனவும் பெயர் சூட்டியுள்ளார் ஹரி மந்திர் ஆசிரம தலைவர் சுவாமி தரம் தேவ்.
ஈட் பிரே லவ் என்ற படத்தில் நடித்து வரும் ஜூலியா அதற்கான படப்பிடிப்புக்காக தற்போது இந்தியாவில் முகாமிட்டுள்ளார் என்பது தெரிந்ததே.
சுவாமி தரம் தேவின் ஆசிரமத்தில் சில காட்சிகளை படம் பிடித்துள்ளனர். இதுகுறித்து தரம் தேவ் கூறுகையில், ஜூலயா என்னை சந்தித்து ஆசி பெற்றார். அப்போது இந்திய கலாச்சாரம் குறித்துக் கூறிய நான் அவற்றிலிருந்து நல்ல விஷயங்களை கற்றுக் கொள்ளுமாறு அவரைக் கேட்டுக் கொண்டேன்.
மேலும், உங்களது குழந்தைகளுக்குப் புதிய பெயர்களை சூட்டுகிறேன் என்று கூறி இரட்டைக் குழந்தைகளுக்கு லட்சுமி, கணேஷ் என்றும், 3வது குழந்தைக்கு கிருஷ்ணன் பலராம் எனவும் பெயர் சூட்டினேன். அதை புன்னகையுடன் ஜூலியாவும் ஏற்றுக் கொண்டார் என்றார்.


Click it and Unblock the Notifications











