லோஹனுக்கு மடோனா போட்ட தடை!
இரவு விருந்து ஒன்றில் கலந்து கொண்ட பாப் ராணி மடோனா, அந்த பார்ட்டியில், ஹாலிவுட் நடிகை லின்ட்சே லோஹன் கலந்து கொள்ளக் கூடாது என்று தடுத்து விட்டார்.
நியூயார்க்கின் தி ஸ்டாண்டர்ட் ஹோட்டல் வளாகத்தில் உள்ள பூம் பூம் ரூம் என்ற இரவு கிளப்பில் ஒரு பார்ட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் மடோனா கலந்து கொண்டார்.
இந்த பார்ட்டியில் பங்கேற்பதற்காக லோஹனும் வந்தார். ஆனால் தனது செக்யூரிட்டிகளை கூப்பிட்ட மடோனா, லோஹனை உள்ளே விடாதீர்கள் என்று உத்தரவிட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இந்த விருந்தில் மடோனாவின் இளம் காதலர் ஜீஸஸ் லஸ், ராக் கலைஞர்கள் ஜான் பான் ஜோவி, ஜெர்ரி சீன்பீல்ட், ஜூட் லா, ஜோஸ் ஹார்ட்னட் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
மடோனாவின் இந்த செய்கைக்குக் காரணம் என்னவென்றால், இமானுவேல் உங்காரோ என்ற பேஷன் நிறுவனத்தின் கலை ஆலோசகராக சமீபத்தில் லோஹன் நியமிக்கப்பட்டார்.
இந்தப் பொறுப்புக்காக மடோனா, பாரிஸ் ஹில்டன் உள்ளிட்ட ஐவரை பரிசீலித்த இமானுவேல் நிறுவனம், கடைசியில் லோஹனை தேர்வு செய்து விட்டது. இதனால் கடுப்பாகி விட்டார் மடோனா. இதனால்தான் பார்ட்டிக்கு வந்த லோஹனை உள்ளே விடாமல் தடுத்து விட்டார் மடோனா என்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











