கல்யாணம் 'முடிந்து' விட்டது-அமி

By Staff

Amy Winehouse with Blake Fielde
எனக்கும், பிளாக் பீல்டர் சிவிலுக்கும் இடையேயான திருமண பந்தம் முடிந்து விட்டது என்று பாடகி அமி வைன்ஹவுஸ் கூறியுள்ளார். இருவரது திருமண பந்தம் 19 மாதங்களே நீடித்தது.

பப் உரிமையாளரைத் தாக்கியதாக ஒரு வருடத்திற்கு முன்பு கைது செய்யப்பட்டார் பிளாக். அன்று முதல் சிறைவாசம் அனுபவித்து விட்டு சமீபத்தில்தான் ரிலீஸானார்.

விடுதலையானவுடன், சுர்ரே நகரில் உள்ள மறுவாழ்வு முகாமுக்குப் போய் விட்டார். இந்த நிலையில்தான் பிளாக்குக்கும், ஜெர்மன் மாடல் அழகியான சோபி ஸ்கான்டிராப்புக்கும் இடையே காதல் மலர்ந்தது.

பிளாக் சிறையிலிருந்து விடுதலையான நாள் முதல் சோபிதான் அவரை அடிக்கடி போய் பார்த்து வருகிறார்.

இதனால் மனமுடைந்த அமி, இனிமேல் அவரைப் பார்க்கப் போவதில்லை என்று கூறியுள்ளார். தனது திருமண பந்தமும் முடிவுக்கு வந்து விட்டதாகும் அவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், எல்லாம் முடிந்து விட்டது. எங்களுக்குள் இனி எதுவும் இல்லை. இனிமேல் அதுகுறித்து நான் சிந்திக்கவே போவதில்லை. எனது கல்யாணத்திற்கு இனியும் எதிர்காலம் இருப்பதாக நான் நினைக்கவில்லை.

வெரும் செக்ஸுக்காக மட்டுமே நாங்கள் சேர்ந்திருந்தோம். இது எனக்கு வெறுப்பையே தந்துள்ளது. மன ரீதியான உறவு எங்களுக்குள் இல்லை.

பிளாக்கை நான் பைத்தியக்காரத்தனமாக நேசித்தேன். யாருமே நேசிக்க முடியாத அளவுக்கு வெறித்தனமாக நேசித்தேன். ஆனால் அது மட்டும் போதுமா?, நிச்சயம் இல்லை.

இது எனக்கு நிச்சயம் தடுமாற்றமான காலம்தான். ஆனால் இப்போது நான் தெளிவாகி விட்டேன் என்று கூறியுள்ளார் அமி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X