ஜேம்ஸ் பாண்டின் புதிய படம் ரெடி!

By Staff

Daniel Graig
ஜேம்ஸ் பாண்ட் பட பிரியர்களுக்கு ஒரு நற்செய்தி. ஜேம்ஸ்பாண்ட் பட வரிசையில் 22வது படமாக உருவாகியுள்ள குவான்டம் ஆப் சொலஸ் ரிலீஸுக்கு ரெடியாகி விட்டதாம்.

உலக சினிமா ரசிகர்களிடையே பாண்ட் படத்திற்கு இருக்கும் மோகம் வேறு படங்ளுக்குக் கிடையாது. அந்த அளவுக்கு உலகம் முழுவதும் மொழி, இனம் பாராமல் பார்த்து ரசிக்கும் ஒரே கேரக்டர் பாண்ட்தான்.

ஜேம்ஸ்பாண்ட் பட வரிசையில் 22வது படமாக குவான்டம் ஆப் சொலஸ் ரிலீஸுக்கு ரெடியாகி விட்டதாம். 007 கேரக்டரில் நடிக்கும் டேணியல் கிரேக்குக்கு இது இரண்டாவது பாண்ட் படம்.

நவம்பர் 7ம் தேதி படம் உலகம் முழுவதும் திரைக்கு வருகிறதாம். 1960ம் ஆண்டு பாண்ட் கேரக்டரை உருவாக்கிய இயான் பிளமிங் எழுதிய சிறுகதையின் தலைப்புதான் படத்தின் தலைப்பாகியுள்ளது.

கேசினோ ராயல் படத்தின் முடிவிலிருந்துதான், குவான்டம் ஆப் சொலஸின் கதை ஆரம்பமாகிறதாம். படம் அதிரடியாக வந்துள்ளதாம். பாண்ட் படப் பிரியர்களின் அத்தனை எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்யும் வகையில் இப்படம் உருவாகியிருப்பதாக கூறுகிறார் டேணியல் கிரேக்.

ஆனால் கிரேக்கை ஜேம்ஸ்பாண்டாக பெரும்பாலான ரசிகர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்பது நினைவிருக்கலாம். அவர்களை இந்தப் புதிய படம் மூலம் கிரேக் வளைப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X