கிட்மேன் 'பாடிகார்ட்' ருத்ரதாண்டவம்

By Staff

Nicole Kidman
ஹாலிவுட் நடிகை நிக்கோல் கிட்மேனின் பாடிகார்டும், அவரது உதவியாளரும் சேர்ந்து இணையதளம் ஒன்றின் புகைப்படக்காரரை போட்டு வெளுத்தது ஹாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹாலிவுட் நட்சத்திரங்களுக்குப் பெரிய தலைவலியாக இருப்பது பாப்பரஸ்ஸி என்றழைக்கப்படும் பத்திரிக்கையாளர்கள் கூட்டம்தான். பிரபலமானவர்களின் பின்னாலேயே பாலோ செய்யும் இவர்கள் வித்தியாசமாக ஏதாவது கண்ணில் பட்டு விட்டால் உடனே புகைப்படம் எடுத்தும், வீடியோவில் சுட்டும் பரபரப்பாக்கி விடுவார்கள்.

இப்படிப்பட்ட பாப்பரஸி கூட்டத்தில் சிக்கித்தான் இளவரசி டயானா சில ஆண்டுகளுக்கு முன்பு கார் விபத்துக்குள்ளாகி உயிரிழந்தார்.

இந்த நிலையில் பாப்பரஸ்ஸி புகைப்படக்காரர் ஒருவரை கிட்மேனின் உதவியாளரும், மெய்க்காவலரும் சேர்ந்து அடித்து, உதைத்துள்ளனர். இது பரபரப்பாகியுள்ளது.

கிட்மேன் தற்போது கர்ப்பமாக உள்ளார். அவரை பின் தொடர்ந்து வந்த ஒரு இணையதளத்தின் புகைப்படக்காரர் ஜெரிமி என்பவர், கிட்மேனைப் புகைப்படம் எடுக்க முயன்றார். இதைப் பார்த்து விட்ட கிட்மேனின் உதவியாளர் டேவிட் காரிஸ் மற்றும் மெய்க்காவலர் ஆகியோர் அந்தப் புகைப்படக்காரரை நெருங்கி காமராவைப் பறித்தனர். பின்னர் முகத்தில் சரமாரியாக குத்து விட்டனர்.

இதில் அந்த புகைப்படக்காரர் நிலை குலைந்து விழுந்தார். பின்னர் அவரிடம் வந்த கிட்மேன் சில ஆபாசமான சொற்களைப் பயன்படுத்தி அந்த புகைப்படக்காரரை சரமாரியாக திட்டினார்.

இந்த சம்பவத்தை அந்தப் புகைப்படக்காரர் தனது வீடியோ காமராவில் பதிவு செய்துள்ளார். ஆனால் குத்து வாங்க ஆரம்பித்ததும் அவரால் தொடர்ந்து ஷூட் செய்ய முடியவில்லை. ஆனால் ஆடியோவில் அவர் அடி வாங்கியதும் (சவுண்டு மட்டும்), கிட்மேன் ஆபாசமாக திட்டியதும் பதிவாகியுள்ளது.

முகத்தில் பலத்த அடிபட்ட புகைப்படக்காரர் ஜெரிமி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார்.

இந்த பஞ்சாயத்து குறித்து சான்டா மோனிகா போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X