பொறுப்பான அம்மா பமீலா!

ஒரு காலத்தில் டிவி பெட்டி பக்கம் இளசுகளை ஈர்த்து வைத்திருந்தவர் பமீலா ஆண்டர்சன். அவரது பேவாட்ச் தொடரைப் பார்க்க உலகத்து இளைஞர் கூட்டம் டிவி பெட்டி முன்பு தவம் கிடந்த நாட்கள் அவை.
அவரது 'அபரிமிதமான' கவர்ச்சியால் பேவாட்ச் தொடர் பெரும் பிரபலமானது. ஒரு காலத்தில் கட்டழகு தேவதையாக வலம் வந்த பமீலா இப்போது பொறுப்பான தாயாக மாறியுள்ளார்.
பமீலாவுக்கு பிரான்டன், டைலன் என இரு மகன்கள். இருவரும் பள்ளி செல்லும் மாணாக்கர்கள். அவர்களுக்கு காலை 7 மணிக்குள் சாப்பாட்டை முடித்து கையில் கொடுத்து விட வேண்டுமாம்.
பமீலா தினசரி இரவு பார்ட்டிகளுக்குச் சென்று விட்டு அதிகாலை 4 மணியளவில்தான் வீடு திரும்புவாராம். வீட்டுக்கு வந்து 2 அல்லது 3 மணி நேரம் மட்டுமே தூங்க முடிகிறதாம். அதன் பின்னர் பசங்களுக்கு டிபன் செய்து அனுப்ப வேண்டும் என்பதால் 6 மணிக்கே எழுந்து விடுவாராம்.
என்னால் ஆட்களை வைத்து இதையெல்லாம் செய்ய முடியும். ஆனால் ஒரு அம்மாவாக அதை என்னால் அனுமதிக்க முடியாது. எனது கையால் அவர்களை சாப்பிட வைத்து, சாப்பாடு கொடுத்து அனுப்புவதுதான் எனக்குப் பிடித்திருக்கிறது, அப்படித்தான் அம்மா என்பவர் இருக்க வேண்டும் என்று பொறுப்பு பிளஸ் பாசத்தோடு பேசுகிறார் பமீலா.
கிரேட் மாம்!


Click it and Unblock the Notifications











