பிரிட்னியை 'அமுக்கிய கேமராக்கள்'!

By Staff

Britney Spears
லாஸ் ஏஞ்சலெஸ் வந்த பாப் ஸ்டார் பிரிட்னி ஸ்பியர்ஸை, 30க்கும் மேற்பட்ட பத்திரிக்கை புகைப்படக்காரர்கள் சூழ்ந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களை பிரிட்னியின் பாதுகாவலர்கள் குண்டுக்கட்டாக தூக்கிப் போட்டதால் சிலர் காயமடைந்தனர்.

அடிக்கடி சர்ச்சையில் சிக்கி வந்த பிரிட்னி ஸ்பியர்ஸ், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செலஸ் நகருக்கு ஞாயிற்றுக்கிழமை வந்தார். அவரது வருகையை அறிந்ததும் விமான நிலையத்தில் 30க்கும் மேற்பட்ட பத்திரிக்கை புகைப்படக்காரர்கள் குவிந்து விட்டனர்.

இதனால் பிரிட்னியால் விமான நிலையத்ைத விட்டு வெளியே வருவதில் பெரும் சிரமம் ஏற்பட்டது. காரில் அமர்ந்திருந்த பிரிட்னியை படம் எடுக்க, புகைப்படக்காரர்கள் காரை சூழ்ந்துகொண்டனர். இதனால் அங்குசலசலப்பு ஏற்பட்டது.

சிலர் கார் கண்ணாடியை திறந்து படம் எடுக்க எத்தனித்தனர். இதையடுத்து களம் புகுந்த பிரிட்னியின் பாதுகாவலர்கள், புகைப்படக்காரர்களை குண்டு கட்டாக தூக்கி போட்டனர். இதில் சிலருக்கு கன்னம், கை, முகத்தில் அடிபட்டு விட்டது. அப்படியும் விடாமல் பிரிட்னியை படம் பிடிக்க அவர்கள் முயன்றனர்.

இருப்பினும் காரை சுற்றிலும் சூழ்ந்து கொண்ட பாதுகாவலர்கள் பிரிட்னியை படம் எடுக்க முடியாதபடி அரண் போல நின்று விட்டனர்.

இந்த சம்பவத்தால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் போலீஸார் வந்து பிரிட்னியின் கார் பத்திரமாக வெளியேற வழி செய்தனர்.

இந்த சம்பவத்தில் பிரிட்னிக்கு எந்த காயமும் இல்லை என்றும், அவர் பத்திரமாக புறப்பட்டுச் சென்றும் காவல்துறை தெரிவித்தது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X