twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஸ்வாட் பள்ளத்தாக்கு அகதிகளுக்கு தாராள உதவி - ஜூலிக்கு போன் செய்து சர்தாரி நன்றி

    By Staff
    |

    Angelina Jolie
    இஸ்லாமாபாத்: வட மேற்கு எல்லைப்புற மாகாணத்தில் தலிபான்களுக்கு எதிரான போரின்போது இடம் பெயர்ந்துள்ள லட்சக்கணக்கான மக்களுக்கு நிதியுதவி செய்ததற்காக ஹாலிவுட் நடிகை ஏஞ்செலீனா ஜூலி மற்றும் அவரது கணவரும் நடிகருமான பிராட் பிட் ஆகியோருக்கு தொலைபேசி மூலம் நன்றி தெரிவித்துள்ளார் பாகிஸ்தான் அதிபர் சர்தாரி.

    பாகிஸ்தானின் வட மேற்கு எல்லைப்புற மாகாணத்திலிருந்து தலிபான்களை விரட்டியடிக்க கடும் யுத்தம் புரிந்து வருகிறது பாகிஸ்தான் ராணுவம்.

    இதன் காரணமாக அங்கிருந்து லட்சக்கணக்கான மக்கள் இடம் பெயர்ந்து முகாம்களில் தங்கியுள்ளனர். அவர்களுக்குத் தேவையான குடிநீர், உணவு, மருந்து உள்ளிட்டவற்றை ஐ.நா. உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் வழங்கி வருகின்றன.

    அதேபோல ஜூலி - பிராட் நடத்தி வரும் ஜூலி -பிட் பவுண்டேஷனும் பெருமளவிலான நிதியுதவியை அறிவித்துள்ளது.

    இதையடுத்து ஜூலி, பிராட் பிட்டை தொலைபேசியில் தொடர்பு கொண்ட அதிபர் சர்தாரி, அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார். மேலும், அவர்களை பாகிஸ்தானுக்கு வந்து செல்லுமாறும் அழைப்பு விடுத்தார்.

    ஜூலி - பிட் பவுண்டேஷனின் வேலை என்ன..?

    உலகம் முழுவதும் எங்கு மனிதாபிமான நெருக்கடிகள் ஏற்பட்டாலும், அந்தப் பகுதியில் உள்ள பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதியுதவி, பொருளதவி உள்ளிட்டவற்றை வழங்கி வருகிறது ஜூலி - பிட் பவுண்டேஷன்.

    ஐ.நா. அகதிகளுக்கான ஹை கமிஷனின் நல்லெண்ணத் தூதராக இருக்கிறார் ஜூலி. இடம் பெயர்ந்த பாகிஸ்தான் மக்களுக்கு அவரது அமைப்பு 10 லட்சம் டாலர் நிதியுதவியை அளித்துள்ளது.

    ஸ்வாட் பள்ளத்தாக்கிலிருந்து இடம் பெயர்ந்துள்ளவர்களின் நிலைமை மிகவும் மோசமாக இருப்பதாகவும், அவர்களுக்கு உதவ வேண்டியது நமது கடமை என்றும் ஜூலி கூறியுள்ளார். இதற்காகத்தான் நன்றி கூறியுள்ளார் சர்தாரி.

    ஈழத் தமிழர்களையும் பார்ப்பாரா ஜூலி..?

    ஸ்வாட் பள்ளத்தாக்கிலிருந்து பல லட்சம் பேர் இடம் பெயர்ந்துள்ள வந்துள்ளதற்காக அனுதாப்படும் ஜூலி, அவர்களை விட மிக மிக மோசமான நிலையில் இருக்கும் ஈழத் தமிழர்களின் பக்கமும் தனது கருணைப் பார்வையைத் திருப்பினால் நலமாக இருக்கும்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X