ஒரு அழகியின் பரிதாப மரணம்!

இரண்டு முறை மிஸ் பிரேசில் அழகியாக தேர்வு செய்யப்பட்டவர் மரியானா. இரு முறை மிஸ் வேர்ல்ட் போட்டியிலும் கலந்து கொண்டார். கடந்த ஆண்டு சீனாவில் நடந்த மிஸ் பிகினி சர்வதேச அழகிப் போட்டியிலும் பங்கேற்றார்.
பிரேசில் நாட்டின் பிரபல மாடல் அழகியாக திகழ்ந்தவர்.
இவருக்கு செப்டிகேமியா என்ற அரிய வகை நோய் இருப்பது இந்த மாதத் தொடக்கத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை தொடங்கியது. உயிரைக் காப்பாற்றுவதற்காக அவரது இரு கைகள் மற்றும் கால்களை டாக்டர்கள் வெட்டி எடுக்க வேண்டியதாயிற்று.
அவரது வயிற்றின் ஒரு பகுதியும் கூட அறுவைச் சிகிச்சை செய்து அகற்றப்பட்டது. இந்த நிலையில் அவரது உடல் நிலை மிகவும் மோசமடைந்து நேற்று அவர் மரணமடைந்தார்.
2 வாரங்களுக்கு முன்புதான், இன்னும் 24 மணி நேரமே மரியானா உயிர் பிழைப்பார் என டாக்டர்கள் தெரிவித்திருந்தனர். ஆனால் அதைத் தாண்டியதால், லேசான நம்பிக்கை பிறந்தது. ஆனால் நேற்று அவர் உயிரிழந்து விட்டார்.
கடந்த 3 வாரங்களாக மருத்துவமனையில் மிக மோசமான நிலையில் போராடிக் கொண்டிருந்தார் மரியானா.
மரியானாவின் இந்த மோசமான முடிவு பிரேசில் மக்களை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











