கம்போடியாவில் உள்ள பிரம்மா கோவிலுக்கு ஏஞ்சலினா ஜூலி பெயர்

இது குறித்து யூனிவர்சல் சொசைட்டி ஆப் ஹிந்துயிசத்தின் தலைவர் ராஜன் ஜெட் கூறியதாவது,
12-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட அந்தக் கோவிலின் பெயர் டா ப்ரோம். இதற்கு பழைய பிரம்மா கோவில் என்ற பெயரும் உண்டு. இதற்கு முதன் முதலில் வைக்கப்பட்ட பெயர் ராஜவிஹாரா என்பதாகும். ஆனால் தற்போது இது ஏஞ்சலினா ஜூலி கோவில் என்றே அழைக்கப்படுகிறது.
உலகப் பாரம்பிரய மிக்க இந்தக் கோவிலின் பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு நான் ஏஞ்சலினா ஜூலியைக் வலியுறுத்தவிருக்கிறேன்.
மேலும், காலித்தனம் மற்றும் சூரையாடுதலில் இருந்தும் கோவிலையும், அதன் சுற்றுப்புறத்தையும் பாதுகாக்க போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று அவர் கூறினார்.
ஜீலியின் தத்துப் பிள்ளை மாடாக்ஸ் கம்போடியாவைச் சேர்நதவன் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
கம்போடியா பழைய பிரம்மா கோவிலுக்கு ஜூலி பெயர் பழைய பிரம்மா கோவில் ஹாலிவுட் cambodia old brahma temle named after jolie old brahma temple


Click it and Unblock the Notifications