ஜெனீபர் ஹட்சன் தாய்-சகோதரர் கொலை

சிகாகோவில் வசித்து வருபவர் ஜெனீபர் ஹட்சன். டிவி தொடர்களில் பிரபலமாகி ஹாலிவுட் நடிகையானவர். கடந்த ஆண்டு சிறந்த துணை நடிகைக்கான ஆஸ்கர் விருதினை வென்றவர்.
இந்த நிலையில் சிகாகோவில் உள்ள ஜெனீபரின் வீட்டில் அவருடன் வசித்து வந்த தாயார் மற்றும் சகோதரர் ஆகியோர்துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
அக்கம் பக்கத்தில் வசித்தவர்கள் ஜெனீபரின் வீட்டில் துப்பாக்கிச் சத்தம் கேட்டதாக ெதரிவித்துள்ளனர்.
இச்சம்பவத்தில் 7 வயது சிறுவன் ஒருவனுக்குத் தொடர்பு இருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். குடும்பத்தகராறில் இந்தக்கொலைகள் நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
படப்பிடிப்புக்காக வெளியூர் போயுள்ள ஜெனீபர், தாயார், சகோதரர் கொலை குறித்து தகவல் அறிந்ததும் சிகாகோ விரைந்துள்ளார்
Comments


Click it and Unblock the Notifications