தாயாகும் லைலா!

முகம்மது அலியின் ஒரே மகள் லைலா அலி. இவரும் பாக்ஸர் தான். பெண்கள் பாக்ஸிங்கில் பெரும் சாதனைகள் படைத்த இவர் சிறந்த புரபஷனல் டான்சரும் கூட. பல டான்ஸ் போட்டிகளிலும் டிவி டான்ஸ் தொடர்களிலும் பங்கேற்றுள்ளார்.
மேலும் பல அமெரிக்க தொலைக்காட்சிகளி்ல் பல்வேறு நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வருகிறார்.
இவர் இப்போது கர்ப்பமாகியுள்ளாராம். இதுகுறித்த தகவலை எஸ்ஸன்ஸ் இழுக்கு பூரிப்புடன் தெரிவித்துள்ளார் லைலா. லைலாவின் கணவர் பெயர் கர்டிஸ் கன்வாய்.
தான் கர்ப்பமாக இருப்பது குறித்து லைலா கூறுகையில், எனக்குப் பையன் பிறப்பானா அல்லது பெண் பிறப்பாளா என்று தெரியவில்லை. ஆனால் மிகவும் ஆர்வத்துடன் எனது குழந்தையை எதிர்நோக்கியுள்ளேன் என்று கூறியுள்ளார்.
லைலாவுக்கு இது முதல் கர்ப்பம். ஆனால் கர்ட்டிஸுக்கு இது நான்காவது குழந்தை. ஏற்கனவே தனது முதல் மனைவி மூலம் கெல்டன், கேமரூன் என இரு மகன்களும், லைலானி என்கிற மகளும் கர்ட்டிஸுக்கு உள்ளார்.
கடந்த கோடை காலத்தில்தான் லைலாவுக்கும், கர்ட்டிஸுக்கும் கல்யாணம் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











