ஜெயிலில் அடைக்கப்பட்ட லிண்ட்சே லோகன்!

By Chakra

Lindsay Lohan
போதை மருந்து வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகை லிண்ட்சே லோகன் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரைச் சேர்ந்த பிரபல ஹாலிவுட் நடிகை லிண்ட்சே லோகன்.

கடந்த 2007-ம் ஆண்டு இவர் போதை மருந்து மற்றும் மது குடித்ததாக போலீசாரால் கைது செய்யப்பட்டார். இவர் மீது கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டது.

எனவே, அவருக்கு 90 நாட்கள் ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது. 14 நாட்கள் ஜெயிலில் இருந்து தண்டனை அனுபவித்தார். இதற்கிடையே அவருக்கு நீதிமன்றத்தில் ஜாமீன் வழங்கப்பட்டது. மேலும், நன்னடத்தை விதியின் கீழ் அவர் போதை மருந்து பயன்படுத்தாமல் இருக்க வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், அவருக்கு மீண்டும் போதை மருந்து சோதனை நடத்தப்பட்டது. அப்போது, அவர் போதை பொருள் பயன்படுத்தியது தெரிய வந்தது. இதை தொடர்ந்து அவரது ஜாமீன் ரத்து செய்யப்பட்டது. மீண்டும் அவரை ஜெயிலில் அடைக்க நீதிபதி எல்டன் எஸ்பால் உத்தர விட்டார்.

இதை தொடர்ந்து அவர் உடனே சிறையில் அடைக்கப்பட்டார். மீண்டும் அவரை வருகிற அக்டோபர் 22-ந்தேதி நீதிமன்றத்தில் மீண்டும் ஆஜர்படுத்த நீதிபதி உத்தர விட்டார். இந்த சோதனையில் அவர் போதை மருந்து பயன்படுத்தவில்லை என்பது தெரிந்தால் விடுவிக்கப்படுவார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X