பயங்கர ஆயுதங்களுடன் ராணுவத்திடம் பிடிபட்ட மெக்சிகோ அழகி

By Staff

Laura Zuniga
குவாடலஜாரா (மெக்சிகோ): மெக்சிகோ நாட்டின் போதைப் பொருள் மாகாணமான சினலாவோவின் அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்ட லாரா ஜூனிகா, பயங்கர ஆயுதங்களுடன் வந்த லாரியில் பயணித்தபோது ராணுவத்திடம் பிடிபட்டு கைதாகியுள்ளார். அவருடன் மேலும் 10 பேரும் கைதாகியுள்ளனர்.

மெக்சிகோ நாட்டின் போதைப் பொருள் நடமாட்டம் அதிகம் உள்ள மாகாணம் சினலாவோ. இந்த மாகாணத்தின் மிஸ் சினலாவோ 2008 அழகிப் போட்டியில் வெற்றி பெற்றவர் லாரா ஜூனிகா.

23 வயதாகும் ஜூனிகா, ஒரு லாரியில் ஆயுதங்களை ஏற்றிக் கொண்டு வந்த கும்பலுடன் பயணித்தபோது, குவாடலஜாரா என்ற இடத்தில் உள்ள ராணுவ சோதனைச் சாவடியில் நடத்தப்பட்ட சோதனையின்போது சிக்கினார்.

அவருடன் 11 பேர் கொண்ட கும்பலும் கைதானது. இந்தக் கும்பல் லாரியில் பயங்கர ஆயுதங்களை வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவர்கள் போதைப் பொருள் கும்பலா அல்லது கொள்ளையர்களா என்பது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இந்தக் கும்பலில் எப்படி ஜூனிகா இடம் பெற்றார். அவர்களுக்கும், ஜூனிகாவுக்கும் என்ன தொடர்பு என்பது குறித்தும் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மொத்தம் இரண்டு லாரிகளை ராணுவ சோதனைச் சாவடியில் ராணுவம் நிறுத்தியது. அதில் ஒரு லாரியில் ஜூனிகா இருந்தார். அவர் இருந்த லாரியில், துப்பாக்கிகள், கையெறி குண்டுகள், தோட்டாக்கள், 53 ஆயிரம் அமெரிக்க டாலர் பணம் உள்ளிட்டவை இருந்தது.

கடந்த ஜூலை மாதம் மிஸ் சினலாவோ அழகிப் பட்டத்தைப் பெற்றார் ஜூனிகா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X