யுஎஸ் ராப் பாடகர் ஏகானுக்கு இலங்கை அனுமதி மறுப்பு!

புத்த மதத்தை இழிவுபடுத்தும் விதத்தில் அவரசு இசை வீடியோ ஒன்று உள்ளதால் ஏகான் இலங்கைக்குள் வர அனுமதியில்லை என கொழும்பு அறிவித்துள்ளது.
I'm lonely.. பாடல் மூலம் மிகப் பிரபலமான மேற்கத்திய ராப் இசைக் கலைஞர் ஏகான் இலங்கையில் இசை நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிட்டிருந்தார்.
ஆனால் இந்த நேரம் பார்த்து அவரது இசை வீடியோ ஒன்று, இலங்கையின் புத்த மதத்தை அவமதிப்பதாக உள்ளதாக இலங்கை கருதுகிறது. 'செக்ஸி பிட்ச்' எனப்படும் பாடலுக்கான வீடியோவில் நீச்சல் குளத்துக்கு அருகில் நடைபெறும் ஒரு நடனம் காட்டப்படுகிறது. அந்த இடத்தில் ஒரு புத்தர் சிலை இருப்பது போல சில விநாடி காட்சி இடம்பெறுகிறது.
இதனைக் கண்டித்து ஏற்கெனவே போராட்டங்கள் நடத்தப்பட்ட நிலையில், இலங்கை அரசு இந்த முடிவை அறிவித்துள்ளது.
"மிகக் குறைவாக உடை உடுத்தியுள்ள பெண்கள் வரும் இடத்தில் புத்தர் சிலை இருப்பது இலங்கையிலுள்ள புத்த மதத்தினரை பெரும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது" என்று கூறி, ஏகான் இலங்கை வர விசா அளிக்கப்படமாட்டாது என்று இலங்கை அரசு கூறியுள்ளது.
ஆனால் இந்த சர்ச்சைக்கு பதிலளிக்கும் விதத்தில், "தான் இறை நம்பிக்க மிக்க ஒரு நபர். அதனால் வேறு எந்த மதத்தினரின் நம்பிக்கையை புண்படுத்த தான் விரும்பமாட்டேன். இது போன்ற சர்ச்சைகளுக்கு வன்முறை பதிலாகாது" என்று அவர் தெரிவித்துள்ளார்.
ஏகான் இலங்கை வர ஏற்பாடு செய்த நிறுவனம் திங்கட்கிழமை தாக்குதலுக்கு உள்ளானது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











