பாட்டர் பட நடிகர் கொலை

ஹாரி பாட்டர் பட வரிசையில் அடுத்து வரவுள்ள படம் ஹாரிபாட்டர் அன்ட் தி ஹாஃப் பிளட் பிரின்ஸ். நவம்பர் மாதம் இப்படம் திரைக்கு வருகிறது. இதில், மார்க்கஸ் பெல்பி என்கிற மாணவனாக நடித்துள்ளவர் இங்கிலாந்தின் ராப் நாக்ஸ். 18 வயதாகும் ராப் நாக்ஸ், வளரும் நடிகர், நாடகங்களிலும் நடித்து வந்தார்.
இந்த நிலையில் லண்டன் அருகே கென்ட், சிட்கப் என்ற இத்தில், ராப் நாக்ஸ் குத்திக் கொல்லப்பட்டார். அவரைக் கொன்றதாக 21 வயது வாலிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இருவருக்கும் இடையே செல்போன் தொடர்பாக ஏற்பட்ட தகராறில் இந்தக் கொலை நடந்துள்ளதாம்.
ராப் நாக்ஸ் ரக்பி கிளப் ஒன்றில் உறுப்பினராகவும் இருந்தார். இதே கிளப்பைச் சேர்ந்த ஜிம்மி மிஸன் என்பவர் 2 வாரங்களுக்கு முன்பு இதுபோலத்தான் குத்திக் கொல்லப்பட்டார் என்பது நினைவிருக்கலாம்.
தி பில் என்ற டிவி தொடரிலும் ராப் நடித்துள்ளார். அவருக்கு மிகச் சிறந்த எதிர்காலம் உள்ளதாக இங்கிலாந்து திரைப்பட வல்லுநர்கள் கணித்திருந்தனர். இந்த நிலையில் ராப் கொல்லப்பட்டு விட்டார்.


Click it and Unblock the Notifications











