விபத்தில் சிக்கிய ப்ரூக் ஹோகன்

ஹாலிவுட்டின் ஹாட் பாடகிகளில் ப்ரூக்கும் ஒருவர். ஹோகன் நோஸ் பெஸ்ட் என்ற ரியாலிட்டி ஷோவையும் நடத்தியுள்ளார். இவரது கவர்ச்சிக்கு ஹாலிவுட்டில் பெரும் ரசிகர் கூட்டம் உள்ளது.
நேற்று புளோரிடா மாநிலம் தம்பா என்கிற இடத்தில் உள்ள பேசைட் பாலத்தில் காரில் போய்க் கொண்டிருந்தார் ப்ரூக். அப்போது 19 வயது இளைஞர் (ப்ரூக்குக்கு 20 வயது) ஒருவர் ஓட்டி வந்த கார், ப்ரூக்கின் கார் மீது பலமாக மோதியது.
இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. ஆனால் இரு கார்களுக்கும் பலத்த சேதமேற்பட்டு விட்டதாம்.
தகவல அறிந்ததும் ப்ரூக்கின் அப்பா ஹல்க் ஹோகன், அம்மா லின்டா ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். மகளிடம் நலம் விசாரித்தனர்.
இந்த விபத்து தொடர்பாக போலீஸார் விசாரித்து வருகின்றனர். யார் மீதும் இதுவரை வழக்குப் பதிவு செய்யப்படவில்லை.
Comments


Click it and Unblock the Notifications