twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மன்றோவுக்கு பக்கத்தில் 'சீட்' பிடித்த பாக்கியசாலி!

    By Staff
    |

    Marilyn Monroe
    மர்லின் மன்றோவின் சமாதிக்கு அருகே இருந்த இடம் 46 லட்சம் டாலருக்கு ஏலம் போயுள்ளது.

    உலகப் புகழ் பெற்ற ஹாலிவுட் கனவுக் கன்னி மர்லின் மன்றோ. பெரும் புகழில் இருந்தபோது, 1962ம் ஆண்டு, 36 வயதான மன்றோ லாஸ் ஏஞ்சலெஸில் உள்ள ஒரு ஹோட்டலில் தற்கொலை செய்து கொண்டார்.

    மன்றோவின் உடல் லாஸ் ஏஞ்சலெஸில் உள்ள வெஸ்ட் உட் வில்லேஜ் நினைவுப் பூங்காவில் அடக்கம் செய்யப்பட்டது.

    இவரது சமாதிக்கு அருகில் ஒரு இடம் இருந்தது. இந்த இடத்தை மன்றோவின் முன்னாள் கணவர் ஜோ டி மாகியோ வைத்திருந்தார். பின்னர் அதை ரிச்சர்ட் போன்சர் என்பவரிடம் விற்று விட்டார்.

    23 ஆண்டுகளுக்கு முன்பு போன்சருக்கு 81 வயதான போது அவர் மரணமடைந்தார். அவரது உடல் இந்த இடத்தில் புதைக்கப்பட்டது.

    இந்த நிலையில் அந்த இடத்தை போன்சரின் மனைவி எலிஸ் போன்சர் விற்பனை செய்ய முடிவு செய்தார். பெவர்லி ஹில்ஸ் பகுதியில் உள்ள தனது வீட்டை வங்கியிடமிருந்து மீட்பதற்காக தனது கணவர் வைத்திருந்த இடத்தை விற்க அவர் தீர்மானித்தார். இதற்காக இபே இணையதளம் மூலம் அவர் ஏல அறிவிப்பை வெளியிட்டார்.

    தொடக்க விலையாக 5 லட்சம் டாலர்கள் நிர்ணயிக்கப்பட்டது. மன்றோ சமாதிக்கு அருகில் உள்ள இடம் என்பதால் ஏக டிமான்ட் ஏற்பட்டது. இறுதியில், 46 லட்சம் டாலருக்கு இந்த இடம் ஏலம் போயுள்ளது.

    ஏலம் எடுத்தவர் யார் என்ற விவரத்தை இபே வெளியிடவில்லை.

    ஏலம் போயுள்ள இடத்திற்கு அருகில்தான் பிளேபாய் நிறுவனர் ஹியூக் ஹெப்னரின் சமாதி இடம் உள்ளது.

    ஏகப்பட்ட ஹாலிவுட் பிரபலங்கள், சிட்னி ஷெல்டன் போன்ற பிரபல எழுத்தாளர்களும் இதே பகுதியில்தான் அடக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X