டெமியைப் பிடித்த அட்டை!

By Staff

Demi Moore
தனது இளமைக்கும், பொலிவுக்கும், வனப்புக்கும், ரத்தத்தை உறிஞ்சும் அட்டைப் பூச்சிகள்தான் காரணம் என்கிறார் இன்னும் 'இம்சிக்கும்' டெமி மூர்.

சமீபத்தில் ஆஸ்திரியாவுக்குப் போனபோது அட்டை பூச்சி வைத்தியம் செய்து விட்டுத் திரும்பியுள்ளாராம் டெமி மூர். அட்டை ரொம்ப டேஞ்சராச்சே என்று கேட்டால், நீங்கள் நினைக்கும் அட்டை வேறு, நான் சொல்லும் அட்டை வேறு என்று விலாவரியாக விளக்குகிறார் டெமி.

ஆஸ்திரியாவில் என்னதான் நடந்தது என்பதை டெமி வாயாலேயே கேட்போம் ...

எல்லோரும் என்னைப் பார்க்க வேண்டும். அதற்கேற்ற உடல் கட்டுடன் இருக்க வேண்டும் என்று நினைப்பவள் நான். ஒரு வாரத்திற்கு முன்பு ஆஸ்திரியா போயிருந்தபோது, எனது உடலை சுத்தப்படுத்த சில தெரபிகளை மேற்கொண்டேன். அதில் ஒன்றுதான் இந்த அட்டைப் பூச்சி தெரபி.

இது சாதாரண வகை அட்டைப் பூச்சிகள் கிடையாது. மாறாக மருத்துவ பயன்பாட்டுக்காக வளர்க்கப்படும் நன்கு பயிற்சி பெற்ற அட்டைப் பூச்சிகள்.

இந்த அட்டைகளை நமது வெற்றுடம்பில் ஊற விடுவார்கள். அது ஒவ்வொரு பகுதியாக சென்று நமது உடலைக் கவ்விப் பிடித்து, ரத்தம் உறிஞ்சும். எனக்கு இது முதல் அனுபவம் என்பதால் முதலில் வயிற்றுப் பகுதியில் ஒரு அட்டையை விட்டனர். பிறகு உடலின் பல்வேறு பகுதிகளுக்கும் அட்டைகளை போட்டு விட்டார்கள்.

அட்டைகளுக்கு முடி பிடிக்காது. உடலில் ரோமம் இல்லாத பகுதிகளில்தான் இது சுதந்திரமாக போகிறது.

இந்த அட்டைகள் நமது ரத்தத்தில் உள்ள அசுத்தத்தை மட்டும் உறிஞ்சி எடுத்து விடுகிறது. மேலும், அட்டையிடம் ஒரு வகை என்சைம் இருக்கிறது. அது நமது ரத்தத்திற்குள் போய், நமது ரத்தத்தை தூய்மைப்படுத்த உதவுகிறதாம். ரத்தம் சுத்தமாவதால் உடலும் ஆரோக்கியமாகிறது. தோல் வனப்பும் கூடி விடுகிறது.

இதுதான் எனது அழகுக்கும், புதுப் பொலிவுக்கும் காரணம் என்கிறார் டெமி.

கொடுத்த வச்ச அட்டை!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X