ரியாலிட்டி ஷோவில் ஜெனீபர் லோபஸ்

ஹாலிவுட்டில் இது ரியாலிட்டி ஷோ நடத்தும் காலம். பல கலைஞர்கள் ரியாலிட்டி ஷோக்களில் தங்களை ஈடுபடுத்திக் கொள்வதில் ஆர்வம் காட்டுகிறார்கள். அந்த வரிசையில் லேட்டஸ்டாக இணைந்துள்ளார் ஜெனீபர் லோபஸ்.
டிஎல்சி என்கிற டிவியில் ஒரு ரியாலிட்டி ஷோவை அந்த டிவியுடன் இணைந்து கூட்டாக தயாரிக்கிறார் ஜெனீபர் லோபஸ்.
தயாரிப்பதோடு மட்டுமல்லாமல் அதில் நடிக்கவும் செய்கிறார் ஜெனீபர். ஒரு தாயாகவும் இருந்து கொண்டு எப்படி நடிப்பிலும், இசைத் துறையிலும் பரிமளிக்க முடிகிறது என்பதுதான் இந்த தொடரின் முக்கிய கரு.
இதுகுறித்து டிஎல்சி தலைவர் ஏஞ்செலா சபிரோ மாதஸ் கூறுகையில், ஜெனீபர் தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளார். அதேசமயம் தனது வாழ்க்கை முறை, அதன் வெற்றி குறித்து நேயர்களுடன் பகிர்ந்து கொள்ளவும் விரும்புகிறார். அதற்கு இந்த டிவி ஷோ வழி காட்டியுள்ளது.
தொடர் தயாரிப்புப் பணி தொடங்கியுள்ளது. இருப்பினும் எப்போது இது ஒளிபரப்பாகும் என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்றார் மாதஸ்.


Click it and Unblock the Notifications











