1.9 கோடிக்கு ஏலத்தில் போன ஜேம்ஸ் பான்ட் துப்பாக்கி

பிரம் ரஷ்யா வித் லவ் என்ற ஜேம்ஸ் பான்ட் படத்தில் சீன் கானரி பயன்படுத்திய வால்தர் ஏர் பிஸ்டல் லண்டனில் உள்ள கிறிஸ்டீஸில் நேற்று ஏலத்தில் விடப்பட்டது. இது எதிர்பார்த்ததைவிட 10 மடங்கு அதிக அளவான ரூ. 1 கோடியே 98 லட்சத்து 81 ஆயிரத்து 934-க்கு ஏலத்தில் போனது.
இதற்கிடையே ஸ்டார் வார்ஸ் படம் தி எம்பயர் ஸ்டிரைக்ஸ் பேக்கில் பயன்படுத்தப்பட்ட அரிய வகை டார்த் வாடர் உடையை நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு வாங்க யாரும் முன்வரவில்லை.
இது தான் ஏலத்தில் வந்த முதல் வாடர் உடையாகும். இது சுமார் 1.6 கோடிக்கு போகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
கடந்த 1974-ம் ஆண்டு வெளிவந்த தி மேன் வித் த கோல்டன் கன் என்ற இன்னொரு ஜேம்ஸ் பான்ட் படத்தில் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி ரூ. 1 லட்சத்து 75 ஆயிரத்து 668-க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டது.
Comments


Click it and Unblock the Notifications