லின்ட்சே 'ஆ' லோஹன்!

சர்ச்சைக்கு அப்பாற்பட்ட நடிகை என்று ஹாலிவுட்டில் யாரையும் கூற முடியாது. அந்த அளவுக்கு அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கி மீள்வது அவர்களுக்கு வழக்கமாகி விட்டது.
லேட்டஸ்டாக லின்ட்சே லோஹன் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார். அவரும், அவரது முன்னாள் காதலர் பெஸ்ட்டும் இணைந்து நடித்துள்ளதாக கூறப்படும் ஆபாசப் படம் ஒன்று ஹாலிவுட்டைக் கலக்கி வருகிறது.
அதில் தோன்றும் இருவரும் படு ஆபாசமான கோலத்தில் காணப்படுகின்றனர். இந்த வீடியோப் படம் ஹாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால் இது போலியான வீடியோ படம் என பெஸ்ட்டின் மேனேஜர் மறுத்துள்ளார். அதில் உள்ளவர் பெஸ்ட் இல்லை. வேறு ஒரு நபர். அதேபோல அந்தப் பெண்ணும் லின்ட்சே இல்லை. அவரைப் போன்று தோற்றமளிக்கும் அமெரிக்கப் பெண். அவர் இல்லினாய்ஸைச் சேர்ந்தவர் என்று தெரிய வந்துள்ளது. இது விஷமத்தனமான வீடியோ என்று கூறியுள்ளார் அவர்.
லின்ட்சேவும் இந்த வீடியோவை மறுத்துள்ளார். அவரது பிரதிநித கூறுகையில், அந்தப் படத்தில் இருப்பவர்கள் அமெரிக்க தம்பதிகள். தங்களுக்குள் நடந்த அந்தரங்கத்தை வீடியோவில் படமாக்கி அதை இணையதளம் மூலம் உலவ விட்டுள்ளனர். இதில் லின்ட்சேவுக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறியுள்ளார்.
உண்மை என்னவோ!


Click it and Unblock the Notifications











