பாரிஸ் ஹில்டன் கல்யாணம்?!

அவ்வப்போது ஏதாவது சர்ச்சையில் சிக்கும் அழகிய பாரீஸ் ஹில்டனும் ராக் கலைஞர் பெஞ்சி மேடனும் காதலித்து வருகிறார்கள்.
இருவருக்கும் சமீபத்தில் ரகசியக் கல்யாணம் ஆகி விட்டதாக செய்திகள் வெளியாகின. பாரீஸின் விரலில் காணப்படும் புதிய வைர மோதிரம்தான் இந்த வதந்தியைக் கிளப்பி விட்டது.
ஆனால் இதை மறுத்துள்ளார் பாரீஸ். எனக்கு இன்னும் கல்யாணம் ஆகவில்லை. இது நிச்சயதார்த்த மோதிரமும் இல்லை. மேடன் எனக்குக் கொடுத்த பரிசு இது. அவர் மிகவும் இனிமையானவர் என்கிறார் புன்னகையுடன்.
தொடர்ந்து அவர் கூறுகையில், நாங்கள் இருவரும் சேர்ந்திருக்க விரும்புகிறோம். இப்போது மட்டுமல்லாது, எப்போதும் சேர்ந்திருக்க ஆசைப்படுகிறேன். எனது கல்யாணம் ரகசியமாக நடக்காது. எனது கல்யாணம் எப்போது, எப்படி நடக்க வேண்டும் என்பது எனக்குத் தெரியும். எல்லோரிடமும் சொல்லி விட்டுத்தான் செய்வேன் என்றார் பாரீஸ்.
ஏற்கனவே மேடனின் தம்பியான ஜோயல், பாரீஸை அண்ணி என்றுதான் அழைத்து வருகிறார். அவரும் பாரீஸின் தோழியான நிக்கோல் ரிச்சியும் நெருங்கிய நட்பு பாராட்டி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது


Click it and Unblock the Notifications











