ஓபாமாவும், பங்காளி பிராட் பிட்டும்!

புதிய இங்கிலாந்து வரலாற்று மரபியல் கழகம்தான் இதுகுறித்து ஒரு புது சுவாரஸ்ய ஆய்வை நடத்தி அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளது.
1845ம் ஆண்டு புதிய இங்கிலாந்து வரலாற்று மரபியல் கழகம் உருவாக்கப்பட்டது. உலகளவில் உள்ள மிகப் பழமையான மரபியல் ஆய்வுக் கழகம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த கழகத்தின் ஆய்வு முடிவின்படி, அமெரிக்க அதிபர் தேர்தல் வேட்பாளர்களாக களம் நிற்க போட்டியில் உள்ள ஓபாமா, ஹில்லாரி, ஜான் மெக்கெய்ன் ஆகியோருக்கிடையே நெருங்கிய குடும்ப உறவுகள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
ஹில்லாரியின் தாயார் பிரெஞ்சு-கனடா வம்சத்தின் வழி வந்தவர். ஹில்லாரிக்கும், பாப் பாடகிகளான மடோனா, செலின் டயோன், அலனிஸ் மோரிசெட் ஆகியோருக்கும் இடையே மரபியல் வழிப்படி சகோதரிகள் முறை வருமாம்.
அதேபோல வெள்ளையர் இனத்தைச் சேர்ந்த தாய்க்கும், கருப்பர் இனத்தைச் சேர்ந்த தந்தைக்கும் பிறந்த ஓபாமாவுக்கு, அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ், முன்னாள் அதிபர்களான சீனியர் புஷ், ஜெரால்ட் போர்ட், லின்டன் ஜான்சன், ஹாரி ட்ரூமேன், ஜேம்ஸ் மேடிசன் ஆகியோர் அண்ணன் முறையில் வருவார்களாம்.
குடியரசுத் தலைவர் தேர்தலில் வேட்பாளர் சீட்டைப் பிடிக்க இவர்கள் கடுமையாக மோதிக் கொண்டிருந்தாலும் இவர்களது மரபியல் வழி ஒன்றுதான். இது அவர்களுக்குத் தெரியாமல் உள்ளது என்கிறார் இந்த ஆய்வை நடத்திய மரபியல் நிபுணரான கிறிஸ்டோபர் சைல்ட்.
இதேபோல பல்வேறு பிரபலங்களையும், மரபியல் ரீதியாக ஆய்வு செய்து பார்த்தபோது, அவர்களது பூர்வீகம் ஒன்றாக இருப்பது தெரிய வந்துள்ளதாம்.
கடந்த 3 ஆண்டுகளாக இந்த ஆய்வை நடத்தி வந்துள்ளார் சைல்ட். அவருடன் இணைந்து ஆய்வில் பங்கு கொண்டவர் கேரி பாய்ட் ராபர்ட்ஸ். இவர் அமெரிக்க அதிபர்களின் மூதாதையர் என்ற ஆய்வு நூலை எழுதியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்து இளவரசர் சார்லஸின் மனைவி கமீலா பார்க்கர், ஹில்லாரிக்கு தூரத்து சகோதரி உறவு முறை வருமாம்.
அதேபோல ஓபாமாவும், ஹாலிட் ஸ்டார் பிராட் பிட் ஆகியோர் சகோதரர்கள் முறையில் வருவார்களாம். இவர்கள் இருவருடைய மூதாதையரின் பெயர் பென் லெபோல்ட். இவர் 1769ம் ஆண்டு மரணமடைந்தார்.
அதேபோல ஹில்லாரியும், பிராட் பிட்டின் காதலியுமான ஏஞ்செலினா ஜூலியும் சகோதரி முறையில் வருவார்கலாம். இவர்களுடைய மூதாதையரின் பெயர் ஜீன் குஸன். இவர் கியூபெக் பகுதியைச் சேர்ந்தவர் (கனடாவில் உள்ளது). இவர் 1718ம் ஆண்டு இறந்தார்.
தலை லைட்டா சுற்றுவது போல இருக்கிறதா?


Click it and Unblock the Notifications











