ப்ரூனியின் நிர்வாணப் படம் ஏலம்!

By Staff

Carla Bruni
பிரான்ஸ் அதிபர் நிக்கோலஸ் சர்கோஸியின் காதல் மனைவி கார்லா ப்ரூனியின் நிர்வாணப் படம் லண்டனில் ஏலத்திற்கு வந்துள்ளது. பிரபல கிறிஸ்டி ஏல நிறுவனம் இந்தப் படத்தை ஏலத்திற்கு வைத்துள்ளது.

முன்னாள் மாடல் அழகியான கார்லா ப்ரூனியை காதலித்து வந்த சர்கோஸி, சமீபத்தில் அவரைத் திருமணம் செய்து கொண்டார்.

ப்ரூனி, சர்கோஸியின் காதல் கதை பிரான்ஸை ஒரு கலக்கு கலக்கியது நினைவிருக்கலாம். இந்த நிலையில் ப்ரூனி இன்னொரு பரபரப்பில் சிக்கியுள்ளார். அவரது நிர்வாணப் படம் ஒன்று லண்டனில் ஏலத்திற்கு வந்துள்ளது.

சர்கோஸியும், ப்ரூனியும் இங்கிலாந்துக்கு வருகை தரவிருந்த சில மணி நேரத்திற்கு முன்பு ப்ரூனியின் நிர்வாணப் படம் ஏலம் விடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

அடுத்த மாதம் வரை இது பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கும். அடுத்த மாதம் 10ம் தேதி ஏலம் விடப்படும். 2000 பவுண்டுகள் வரை இது ஏலம் போகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் படத்தை மைக்கேல் கோம்டே என்பவர் எடுத்துள்ளார். ப்ரூனி படு இளமையாக இப்படத்தில் காட்சி அளிக்கிறார். அவரது உடலில் ஒரு பொட்டுத் துணி கூட கிடையாது. இருப்பினும் தனது இரு கைகளாலும் மார்புகளுக்கு குறுக்காக வைத்து போஸ் கொடுத்துள்ளார் ப்ரூனி.

இத்தாலியைச் சேர்ந்த ப்ரூனி, திருமணத்திற்கு முன்பு வரை பிசியான மாடலாக இருந்து வந்தார். சமீபத்தில் கூட அவர் ஜிக்யூ என்கிற மேகஸினுக்கு நிர்வாணமாக போஸ் கொடுத்துள்ளார். அந்தப் படங்கள் இந்த
மாத இதழில் வெளியாகவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

ப்ரூனியின் நிர்வாணப் புகைப்படம் ஏலத்திற்கு வந்துள்ளதால் மீண்டும் ஒரு பரபரப்பில் சிக்கியுள்ளார் ப்ரூனி. ஆனால் சர்கோஸி வேறு ஒரு கவலையில் மூழ்கியுள்ளாராம். அவருக்கு சரிவர ஆங்கிலம் பேச வராது என்பதால், இங்கிலாந்து ராணியை சந்திக்கும்போது எப்படிப் பேசுவது என்பதுதான் அவரது பெரிய கவலையாம்!!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X