‘ஹாலிவுட்’டைக் காக்க ஒரு முயற்சி!

By Sudha

Hollywood Sign
மெளன்ட் லீ மலையின் மேல் கடந்த 1923ம் ஆண்டு நிறுவப்பட்ட பிரமாண்ட ஹாலிவுட் என்ற பெயர்ப் பலகை அழிவைச் சந்தித்துள்ளது. இதையடுத்து இந்தப் பலகையக் காக்க ஹாலிவுட்நட்சத்திரங்கள் திரண்டுள்ளனர்.

1923ம் ஆண்டு ஹாலிவுட்டின் மெளன்ட் லீ மலையின் மேல் இந்த பிரமாண்ட பெயர்ப் பலகை அமைக்கப்பட்டது. ஹாஸ் ஏஞ்சலெஸ் டைம்ஸ் பதிப்பாளர் ஹாரி சான்ட்லர் இதை நிறுவினார். இதற்கு அப்போது ஆன செலவு 21 ஆயிரம் டாலர்களாகும். 13 எழுத்துக்களைக் கொண்ட இந்தப் பெயர்ப் பலகை, 30 அடி அகலமும், 50 அடி நீளமும் கொண்டதாகும். மெட்டல் பலகைகளால் இது உருவாக்கப்பட்டது. இரும்புக் குழாய்கள், வயர்கள், தொலைபேசி கம்பங்கள் ஆகியவை இதில் அடக்கம்.

இந்த பலகையில் 4000, 20 வாட்ஸ் பல்புகளும் பொருத்தப்பட்டுள்ளன. இரவில் இது அழகுற மிளிரும். இரவில் விளக்குகள் எரியும்போது, முதலில் ஹாலி என்றும் பின்னர் உட் என்பதும் ஒளிரும்.பிறகு கடைசியில் உள்ள லேன்ட் என்ற வார்த்தையும் மிளிரும். இப்படியாக இது மாறி மாறி ஒளிரும்.

ஆரம்பத்தில் இந்த பலகையை ஒன்றரை வருடங்களுக்கு மட்டுமே வைத்திருக்க தீர்மானிக்கப்பட்டதாம். ஆனால் 80 ஆண்டுகளைத் தாண்டியும் இது பிரபலமாக உள்ளது.

தற்போது இந்தப் பலகைக்கு ஆபத்து வந்துள்ளது. இந்த இடத்திற்கு அருகில் உள்ள ரியல் எஸ்டேட்காரர் அங்கு மிகப் பெரிய குடியிருப்பைக் கட்டப் போகிறார். இதற்காக ஹாலிவுட் போர்டையும் காலி செய்ய கிளம்பியுள்ளார்.

இதையடுத்து அருகில் உள்ள இடத்தை வாங்கி ஹாலிவுட் போர்டைக் காக்க ஹாலிவுட் பிரபலங்கள் திரண்டுள்ளனர்.

பிளேபாய் பத்திரிக்கை அதிபர் ஹியூக் ஹெப்னர் 9 லட்சம் டாலர் நிதியை இதற்காக வழங்கியுள்ளார். இதேபோல ஹாலிவுட் நட்சத்திரங்களான டாம் ஹேங்ஸ், இயக்குநர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் உள்ளிட்டோரும் நிதியுதவி அளித்துள்ளனர்.

மொத்தம் 12.5 மில்லியன் டாலர் நிதி சேர்ந்ததும், அருகில் உள்ள இடத்தை வாங்கி, ஹாலிவுட் போர்டைக் காப்பாற்றத் திட்டமிட்டுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X