தமிழ் படத்தில் ஜெஸிகா ஆல்பா?

பெண்டாஸ்டிக் போர் படத்தின் நாயகி ஜெஸிகா ஆல்பா. வெங்கட் பிரபு இயக்கும் புதிய படமான 'கோவா'வில் அவர் நடிக்கப் போவதாக கோலிவுட்டே பரபரக்கிறது.
இந்தப் படத்தை ஹாலிவுட்டின் வார்னர் பிரதர்ஸூம், கோலிவுட்டின் செளந்தர்யா ரஜினிகாந்தும் இணைந்து தயாரிக்கிறார்கள். வார்னர் பிரதர்ஸின் முதல் தமிழ்ப் படம் என்ற பெருமையுடன் வரும் இந்தத் திரைப்படத்தில் மொத்தம் 3 நாயகிகள். அவர்களில் ஒருவராக ஜெஸிகா ஆல்பாவை நடிக்க வைக்க வெங்கட் பிரபு ஆசைப்பட்டார்.
தயாரிப்பாளர்கள் வார்னர் பிரதர்ஸ் என்பதால் ஜெஸிகாவை அணுகுவதும் அவருக்கு எளிதாகவே இருந்துள்ளது. உடனடியாக ஜெஸிகாவுக்கு கோவா படத்தின் கதை-வசனத்தை அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. கோவா ஸ்க்ரிப்டை ஜெஸிகாவின் மேனேஜர் மூலம் அனுப்பி வைத்துள்ளார் வெங்கட் பிரபு.
ஜெய், பிரேம்ஜி, வைபவ், அரவிந்த் ஆகாஷ் நடிக்கும் இந்தப் படத்தின நாயகிகளாக ஸ்னேகா மற்றும் ஜெனிலியா நடிக்கக் கூடும் எனத் தெரிகிறது.
ஜெஸிகா சம்மதம் கிடைத்ததும் முழுவீச்சில் படப்பிடிப்பு நடக்க உள்ளது.
அவங்க வருவாங்களா..?


Click it and Unblock the Notifications











