நான் லெஸ்பியன் .. லின்ட்ஸே

22 வயதாகும் லின்ட்ஸேவுக்கு, 31 வயதாகும் சமந்தாவுடன் நீண்ட காலமாகவே ஓரினச் சேர்க்கை தொடர்பு இருக்கிறதாம். இருவரும் அடிக்கடி சேர்ந்து பல இடங்களுக்கும் போய் வருவதை வழக்கமாக வைத்துள்ளனர். இதுவரை பகிரங்கமாக இந்த உறவுகுறித்து லின்ட்ஸே பேசியதில்லை. ஆனால் முதல் முறையாக ஒத்துக் கொண்டுள்ளார்.
அமெரிக்க ரேடியோ நிகழ்ச்சியான லவ்லைன் என்ற நிகழ்ச்சிக்கு அவர் அளித்த பேட்டியில், எனக்கும் சமந்தாவுக்கும் நீண்ட காலமாகவே நல்ல உறவு உள்ளது. இதற்காக நாங்கள் வருத்தப்படவில்லை என்று கூறியுள்ளார்.
லின்ட்ஸேவிடம் பேட்டி காண்பதற்கு முன்பு சமந்தாவிடம் அந்த ரேடியோ நிறுவனம் பேட்டி எடுத்தது. அப்போது சமந்தாவும் லின்ட்ஸேவுடனான தொடர்பை ஒத்துக் கொண்டார்.
இதற்கிடையே, லின்ட்ஸேவுக்கு திருமணம் நடக்கப் போவதாக முன்பு வெளியான செய்தியை அவரது பி.ஆர்.ஓ. லெஸ்லி ஸ்லோன் ஜெல்னிக் மறுத்துள்ளார்.


Click it and Unblock the Notifications











