போதை கேஸ்: சிறையிலிருந்து ரிலீஸானார் லிண்ட்சே லோகன்!

By Sudha

Lindsey Lohan
லாஸ்ஏஞ்சல்ஸ்: போதை மருந்து வழக்கில் கைதாகி சிறைக்குள் அடைக்கப்பட்ட அமெரிக்காவை சேர்ந்த பிரபல ஹாலிவுட் நடிகை லிண்ட்சே லோகன், சனிக்கிழமை ஜாமீனில் வெளியானார்.

போதை மருந்து பயன்படுத்தியதாக சில வாரங்களுக்கு முன் இவர் கைது செய்யப்பட்டார். அவரை 90 நாட்கள் சிறையில் அடைக்க நீதிமன்றத்தில் தீர்ப்பு கூறப்பட்டது. சில நாட்கள் மட்டுமே சிறையில் இருந்த அவர் நன்னடத்தை விதியின் கீழ் விடுதலை செய்யப்பட்டார்.

இந்நிலையில் சமீபத்தில் அவருக்கு போதை மருந்து பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் அவர் மீண்டும் போதை மருந்து பயன்படுத்தியது தெரியவந்தது. எனவே, அவரை மீண்டும் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

இதைத் தொடர்ந்து லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள புறநகர் சிறையில் அவர் அடைக்கப்பட்டார். இதற்கிடையே தன்னை ஜாமீனில் விடுவிக்க கோரி கோர்ட்டில் அவர் மனு செய்திருந்தார்.

மனுவை விசாரித்த நீதிபதி, நடிகை லிண்ட்சே லோகன் ரூ.1 கோடியே 35 லட்சம் ஜாமீன் தொகை செலுத்த உத்தரவிட்டார். அத்தொகையை செலுத்தி நேற்று முன் தினம் இரவு 11.40 மணிக்கு லிண்ட்சே விடுதலையானார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X