நடிகையிடம் சில்மிஷம்-'ஹோஸ்ட்'டுக்கு வார்னிங்

அமெரிக்காவின் அசத்தல் மாடல்களில் ஒருவர்தான் டைரா பாங்க்ஸ். படு கிளாமரான இவர் நடிகையாகவும் இருக்கிறார், பாடகியாகவும் இருக்கிரார், டிவி ஹோஸ்ட் ஆகவும் கலக்குகிறார்.
டைராவின் அழகில் மயங்காதவர்களே கிடையாது. அசரடிக்கும் அழகுடன் விளங்கும் டைராவைப் பார்த்து சக டிவி ஹோஸ்ட் ஒருவரே ஓவராக ஜொள்ளு விட்டு இப்போது வம்பில் மாட்டிக் கொண்டுள்ளார்.
அவரது பெயர் பிராடி க்ரீன் (அதான், பச்சையாக நடந்து கொண்டார் போலும்). கடந்த 18ம் தேதி மன்ஹாட்டனில் தி டைரா பாங்க்ஸ் ஷோ என்ற நிகழ்ச்சி நடந்தது. அப்போது டைராவிடம் ஓவராகவே ஜொள்ளு விட்டுள்ளார் பிராடி. இதையடுத்து டைரா சார்பில் க்ரீன் மீது கோர்ட்டில் வழக்கு போடப்பட்டது.
அந்த வழக்கில் தன்னை தொடர்ந்து இம்சை செய்து வருகிறார் க்ரீன். லெட்டர் கொடுக்கிறார், போன் செய்து வழிகிறார். பூக்களை அனுப்பி காதல் வசனம் பேசுகிறார். இவரது தொல்லை தாங்க முடியில்லை என்று கூறப்பட்டிருந்தது.
இதையடுத்து க்ரீனை கைது செய்ய கோர்ட் உத்தரவிட்டது. அதன் பேரில் அவர் கைது செய்யப்பட்டார். இருப்பினும் அவரை உடனடியாக சிறையில் அடைக்காத கோர்ட், இனிமேல் டைரா இருக்கும் பக்கமே திரும்பிப் பார்க்கக் கூடாது. மீறி தொந்தரவு செய்தால் சிறையில் தள்ள வேண்டியிருக்கும் என்று எச்சரித்து விட்டு விட்டது.
லாஸ் ஏஞ்சலெஸில் இருக்கும் பாங்க்ஸின் ஸ்டுடியோவுக்கும் அடிக்கடி வந்து ரப்சர் செய்வாராம் க்ரீன். என்னோடு பேசு என்று வற்புறுத்துவாராம்.
மே 13ம் தேதி க்ரீன் மீதான வழக்கை நீதிபதி ஒத்திவைத்துள்ளார். ஒருவேளை க்ரீன் திருந்தாவிட்டால் அவருக்கு ஒரு வருட காலம் சிறைத் தண்டனை விதிக்கப்படலாமாம்.
எதற்கு வழிவானேன், இப்படி அலைவானேன்!


Click it and Unblock the Notifications











