டைவர்ஸ் செய்யும் 'அவ்வை சண்முகி'

By Staff

Robin Williams with Marsha Garces
அவ்வை சண்முகியின் ஒரிஜினல் படமான மிஸஸ் டவுட்பயர் பட நாயகன் ராபின் வில்லியம்ஸின் 19 வருட திருமண வாழ்க்கை முடிவுக்கு வருகிறது. வில்லியம்ஸின் மனைவி மார்ஷா கேர்சஸ் வில்லியம்ஸ் விவாகரத்து கோரி மனு செய்துள்ளார்.

இதுதொடர்பாக சான்பிரான்சிஸ்கா உச்சநீதிமன்றத்தில் மார்ஷா மனு தாக்கல் செய்துள்ளார். தனக்கும், கணவருக்கும் இடையே தீர்த்துக் கொள்ள முடியாத அளவுக்கு கருத்து வேறுபாடுகள் அதிகரித்து விட்டதாக விவாகரத்துக்கு காரணம் கூறியுள்ளார் மார்ஷா.

ராபின் வில்லியம்ஸுக்கும், மார்ஷாவுக்கும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். தற்போது 56 வயதாகும் வில்லியம்ஸ், குட்வில் ஹன்டிங் படத்துக்காக ஆஸ்கர் விருது பெற்றவர்.

வில்லியம்ஸுக்கும், மார்ஷாவுக்கும் கல்யாணமான கதையே சுவாரஸ்யமானது. வில்லியம்ஸும், அவரது முதல் மனைவி வெலரி வெலார்டியும் சந்தோஷமாக குடும்பம் நடத்திக் கொண்டிருந்த நேரம் அது. அவர்களது மகன் சாசேரியைப் பார்த்துக் கொள்ள ஆள் தேடிக் கொண்டிருந்தார் வில்லியம்ஸ்.

அந்த சமயத்தில் குழந்தையைப் பார்த்துக் கொள்ளும் ஆயாவாக வந்தவர்தான் மார்ஷா. அப்போது இருவருக்கும் காதல் ஏற்பட, முதல் மனைவியை விவாகரத்து செய்து விட்டு மார்ஷாவை மணந்து கொண்டார் வில்லியம்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X