ஸ்பீல்பெர்க் படத்தில் சுக்வீந்தர்!

'தில் சே' படத்தில் இடம் பெற்ற 'சய்யா சய்யா' பாடல் மூலம் பெரும் பிரபலமானவர் சுக்வீந்தர் சிங். அதற்கு முன்பாக தமிழில் ரட்சகன் உள்ளிட்ட சில படங்களிலும் பாடியுள்ளார்.
இந்த நிலையில் 2வது முறையாக ஹாலிவுட்டுக்குப் பாடப் போயுள்ளார் சுக்வீந்தர். ஏற்கனவே 2006ம் ஆண்டு ஸ்பைக் லீயின் படமான இன்சைட் மேன் படத்தில் ஒரு பாடல் பாடியுள்ளார்.
தற்போது சுக்வீந்தரைத் தேடி ஸ்பீல்பெர்க் வந்துள்ளார். டென்ஸில் வாஷிங்டன் நடிக்க, ஸ்பீல்பெர்க் இயக்க, யுனிவர்சல் பிச்கர்ஸ் தயாரிக்கும் புதிய படத்தில் சுக்வீந்தர் பாடவுள்ளார்.
இந்தப் படத்திற்காக குஜராத்தின் கட்ச் பகுதியைச் சேர்ந்த பிரபலமான நாட்டுப்புற பாடல் வடிவத்தை தேர்வு செய்துள்ளாராம் சுக்வீந்தர். இதுதான் சரியான இசை வடிவம். இந்த பாடலை நமது பாணியிலேயே பாடப் போகிறேன். மேற்கத்திய இசையை கொஞ்சம் கூட இதில் சேர்க்கப் போவதில்லை. அப்போதுதான் நமது வாடை இதில் இருக்கும், நமது நாட்டின் பெருமையும் உலகுக்குத்தெரிய வரும் என்கிறார் சுக்வீந்தர்.
தற்போது ஏ.ஆர். ரஹ்மான் இசையில் இர்பான் கான், அனில் கபூர் நடித்திருக்கும் ஸ்லம் டாக் மில்லினர் என்ற படத்திற்காக பாடல்கள் பாடியுள்ளார் சுக்வீந்தர்.
இப்படத்தின் பாடல்கள் படு சிறப்பாக வந்திருப்பதாக ரஹ்மானையும், பாடல்களை எழுதிய குல்ஸாரையும் புகழ்கிறார் சுக்வீந்தர்.
பலே, பலே!


Click it and Unblock the Notifications











