திருமணம் செய்ய பிட்- ஏஞ்செலீனா ஜூலி முடிவு

மிகவும் எளிமையான முறையில் இந்தத் திருமணம் நடைபெறுமாம். பிட், ஜூலி ஜோடிக்கு மடாக்ஸ் (8), பாக்ஸ் (6), சஹாரா (5), ஷிலோ (3) மற்றும் 21 மாதமேயான இரட்டையர்களான நாக்ஸ் மற்றும் விவியன் என ஆறு குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில், பிட்டும், ஜூலியும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என மடாக்ஸ் வற்புறுத்தி வருகிறானாம். தொடர்ந்து ஷிலோ, சஹாராவும் வற்புறுத்த ஆரம்பித்ததால், குழந்தைகளுக்காக திருமணம் செய்து கொள்ள பிட்டும், ஜூலியும் முடிவெடுத்துள்ளனராம்,.
இதுகுறித்து இவர்களின் நெருங்கிய நண்பர் ஒருவர் கூறுகையில், பணத்தை வீணடிக்க பிட்டும், ஜூலியும் விரும்பவில்லை. எனவே எளிமையான திருமணமாக இது அமையும் என்றார்.
பிராட் பிட்நடிகை ஜெனீபர் அனிஸ்டனை மணந்து விவாகரத்து பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
angelina jolie ஏஞ்செலீனா ஜூலி திருமணம் பிராட் பிட் ஹாலிவுட் நட்சத்திரங்கள் brad pitt hollwood stars marriage


Click it and Unblock the Notifications