வீடியோ கேம்ஸிலும் கலக்கும் 007!

பியர்ஸ் பிராஸ்னன் உருவத்தை வைத்து இந்த வீடியோ கேம்ஸ் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வகை வீடியோ கேம்ஸ் நிறைய வந்து விட்டது. லேட்டஸ்டாக வந்துள்ள கோல்டன் ஐ 007 வீடியோ கேம்ஸ் மார்க்கெட்டில் சக்கை போடு போடுகிறதாம்.
ஒரிஜினல் பியர்ஸ் குரலுடன், படத்தில் இருப்பதைப் போன்ற ஆக்ஷன், அதிரடிக் காட்சிகளுக்கு இதில் பஞ்சமே இல்லையாம்.
படத்தில் கூட இடம் பெறாத பல அதிரடி வசனங்களும் இந்த வீடியோ கேம்ஸில் இடம் பெற்றுள்ளதாம். முழு நீளப் படத்தைப் பார்க்கும் அதே திரில், திருப்தி, தில் இந்த வீடியோவிலும் நீக்கமற நிறைந்துள்ளதால் ஹிட் ஆகியுள்ளது இந்த கோல்டன் ஐ 007.
பிளேஸ்டேஷன், எக்ஸ்பாக்ஸ் ஆகியவற்றில் இந்த வீடியோவை கண்டு களிக்க முடியும்.
His name is Bond, Video Bond!
Comments


Click it and Unblock the Notifications