மடோனாவுக்கு கொலை மிரட்டல்!

இதைத் தொடர்ந்து அவர் செல்லும் இடங்களிலெல்லாம் பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஸ்டிக்கி & ஸ்வீட் எனும் தலைப்பில் உலகம் பயணம் மேற்கொண்டுள்ள மடோனா, செர்பியத் தலைநகர் பெல்கிரேடில் இசை நிகழ்ச்சி நடத்தச் சென்றார்.
திங்கள்கிழமை ஒரு மர்ம நபர் அவருக்கு போனில் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதன் பின்னணியில் யார் உள்ளனர், காரணம் என்ன என்றெல்லாம் தெரியவில்லையாம். இந்த மிரட்டலைத் தொடர்ந்து மடோனாவுக்கு பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
செர்பியாவில் இசை நிகழ்ச்சி முடித்துக் கொண்டு அவர் ருமானியாவுக்கு செல்கிறார். அங்கும் பாதுகாப்பு நிலைமை குறித்து அவருக்கு சந்தேகம் இருப்பதால், இரு தனியார் அமைப்புகள் மூலம் பாதுகாவலர்களை நிமித்துள்ளாராம்.
Comments


Click it and Unblock the Notifications