நவோமி 'என்கேஜ்ட்'?

கருப்பு வைரமான நவோமி, முதலாவது கருப்பர் இன சூப்பர் மாடல் அழகி என்ற பெருமையைப் பெற்றவர். 38 வயதாகும் நவோமி, உலகில் உள்ள சூப்பர் மாடல் அழகிகளில் தனி இடத்தில் இருப்பவர்.
இந்த நிலையில் ரஷ்யாவைச் சேர்ந்த கோடீஸ்வர காதலரான விலாடிமிர் டோரோனினுடன் அவர் கை விரலில் வைர மோதிரத்துடன் வளைய வருகிறார். இதனால் அவருக்கும், டோரோனினுக்கும் இடையே நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதா என்ற கேள்வியும், தொடர்ந்து வதந்திகளும் கிளம்பியுள்ளன.
கடந்த மே மாதம்தான் டோரோனினை சந்தித்தார் நவோமி. அது முதல் இருவரும் காதலித்து வருகின்றனர் என்று கூறப்படுகிறது.
மேலும் சமீபத்தில் திருமண உடைகளையும் நவோமி வாங்கி விட்டதாகவும் ஒரு செய்தி கூறுகிறது.
கை விரலில் மோதிரம் தகதகக்க பெருமையுடன் நவோமி வலம் வருவதைப் பார்க்கும்போது அவர் எங்கேஜ் ஆகி விட்டார் என்று தெரிகிறது என மாடல் உலக வட்டாரத்தில் பலமாக பேசப்படுகிறது.
நல்லா வாழட்டும், வாழ்த்துவோம்!


Click it and Unblock the Notifications











