வினோனாவுடன் கீனு ரீவ்ஸி காதல்?

கீனு ரீவ்ஸும், வினோனா ரைடரும் நீண்ட காலமாக பழகி வருகிறார்கள். ஆனால் இது நட்புதான், காதல் அல்ல என்று கீனு ரீவ்ஸ் தொடர்ந்து மறுத்து வந்தார்.
ஆனால் இருவரும் இணைந்து தற்போது நடித்து வரும் தி பிரைவேட் லைவ்ஸ் ஆப் பிப்பா லீ படப்பிடிப்புத் தளத்தின்போது இருவரும் படு நெருக்கமாக பழகி வருவதாகவும், இருவருக்கும் இடையிலான கெமிஸ்ட்ரி படு பொருத்தமாக உள்ளதாக ஸ்டார் இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
படப்பிடிப்புத் தளத்திலேயே இருவரும் காதல் பாடம் படித்து வருவதாகவும் அந்த செய்தி கூறியிருந்தது. ஆனால் இதை ரீவ்ஸின் மேனேஜர் மறுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், இது உண்மை இல்லை. முழுக்க முழுக்க வதந்திதான். இருவரும் பல ஆண்டுகளாக நட்போடுதான் இருந்து வருகிறார்கள். இப்போது இருவரும் சேர்ந்து நடிப்பதால் பற்ற வைத்து விட்னர் என்று கூறியுள்ளார் அவர்.
ஆனால் கனக்டிகட் நகரில் நடந்து வரும் படப்பிடிப்பின்போது இருவரும் படு நெருக்கமாகத்தான் இருக்கிறார்கள் என்று பட யூனிட்டிலிருந்தே செய்திகள் கசிந்து வருகின்றன.
இந்த காதல் வதந்தி குறித்து ரைடரின் தரப்பிலிருந்து எந்தத் தகவலும் இல்லை.


Click it and Unblock the Notifications











