மைக்கேல் ஜாக்சன் என் அப்பா அல்ல - நார்வே டான்ஸர் ஒமர் பட்டி மறுப்பு

By Staff

Omer Bhatti
லாஸ் ஏஞ்சலெஸ்: ஜாக்சன் எனக்கு நல்ல நண்பராக இருந்தார். என்னை தனது மகனைப் போலவே உள்ளதாக அவர் கூறுவார். ஆனால் எனக்கு அவர் தந்தை அல்ல என்று கூறியுள்ளார், ஜாக்சனின் ரகசிய மகனாக கருதப்படும் நார்வே இளைஞர் ஒமர் பட்டி.

பார்க்க ஜாக்சன் போலவே இருக்கிறார் ஒமர் பட்டி. இவர் ஜாக்சனின் ரகசிய மகன் என்று ஒரு தகவல் உள்ளது. 25 வயதாகும் ஒமர் பட்டியின் தந்தை ஜாக்சனிடம் டிரைவராக இருந்தவர். தாயார் ஆயாவாக இருந்தவர்.

ஜாக்சனுக்கும், பட்டியின் தாயாருக்கும் இடையே ஒரே ஒரு நாள் இரவு ஏற்பட்ட உறவில் பிறந்தவர் பட்டி என்று ஒரு தகவல் உள்ளது.

இதை உறுதிப்படுத்துவது போல லாஸ் ஏஞ்சலெஸில் நடந்த ஜாக்சன் இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் பட்டியும் கலந்து கொண்டார். ஜாக்சன் குடும்பத்தினருடன் முன்வரிசையில் அமர்ந்திருந்தார்.

பட்டியும், ஜாக்சனும், துனீஷியாவில் முதல் முறையாக சந்தித்துக் கொண்டனர். அப்போது பட்டிக்கு வயது 12. நன்றாக டான்ஸ் ஆடக் கூடியவரான பட்டி, ஜாக்சன் முன்பு அவரைப் போலவே ஆடிக் காட்டி அசத்தினாராம்.

இந்த நிலையில் ஜாக்சன் தனது தந்தை அல்ல என்று பட்டி கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ஜாக்சன் எனது தந்தை அல்ல. நானும், அவரும் மிக மிக நெருங்கிய நண்பர்களாக இருந்தோம். எனது நல்ல நண்பர் அவர்.

என்னைப் போலவே இருக்கிறாயே என்று கூறுவார் ஜாக்சன். அதை வைத்து எனது தந்தைதான் ஜாக்சன் என்று கூறுகிறார்கள். ஆனால் உண்மை அதுவல்ல என்று கூறியுள்ளார் பட்டி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X