பமீலாவுக்கு இன்னொரு டைவர்ஸ்!

பே வாட்ச் தொடரின் முன்னாள் கலக்கல் நாயகியான 40 வயது பமீலாவின் 3வது திருமணம் இது. முதன் முதலில் டிரம் மாஸ்டர் டோமி லீயை மணந்தார். அந்தத் திருமணத்தில் கசப்பு ஏற்படவே டோமியை விட்டு விட்டு, ராக் பாடகர் கிட் ராக்கை மணந்தார்.
இந்தக் கல்யாணம் ஜஸ்ட் நான்கு மாதங்கள்தான் நீடித்தது. பிறகு அவரை விவாகரத்து செய்து விட்டார். அவரை விட்டுப் பிரிந்தவுடன் ரிக் சாலமோனை மணந்தார்.
ரிக், பாரீஸ் ஹில்டனுடன் படு ஆபாசமாக நடித்து புகழ் பெற்றவர். அந்த வீடியோ ரொம்ப நாட்களுக்கு படு பரபரப்பாக ரவுண்டு வந்து கொண்டிருந்தது.
ரிக்குக்கு, பமீலா 2வது சம்சாரம் ஆவார். ஏற்கனவே நடிகை ஷானன் டொஹர்த்தியுடன் 9 மாதங்கள் குடும்பம் நடத்தி விட்டுப் பிரிந்தார். அதன் பின்னரே பமீலாவை மணந்தார்.
பமீலாவுக்கும், ரிக் சாலமோனுக்கும் கடந்த ஆண்டு அக்டோபர் 6ம் தேதி லாஸ் வேகாஸில் கல்யாணம் நடந்தது. அதன் பின்னர் டிசம்பர் 13ம் தேதி இருவரும் பிரிந்து விட்டனர்.
இந்த நிலையில் பிப்ரவரி மாதம், தங்களைப் பிரித்து விடுமாறு பமீலா வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் விசாரணை முடிந்து இருவரையும் பிரித்து வைத்து கோர்ட் உத்தரவிட்டுள்ளது. ரிக் தன்னை மோசடி செய்து விட்டார் என்று விவாகரத்துக்கான காரணத்தைக் கூறியுள்ளார் பமீலா. ஆனால் என்ன மோசடி என்பதை கோர்ட் வெளிப்படையாக தெரிவிக்கவில்லை.
இந்த விவகாரத்து மூலம் பமீலாவின் 3வது திருமண வாழ்க்கையும் முடிவுக்கு வந்துள்ளது.


Click it and Unblock the Notifications











