சால்ட் பட வெளியீட்டு விழாவில் ஏஞ்சலினா ஜூலி தாக்கப்பட்டார்

மாஸ்கோவில் இந்த விழா நடந்தது. அப்போதுதான் இந்த எதிர்பாராத சம்பவம் நடந்து விட்டது. விழாவில் பங்கேற்க ஜூலி ரெட் கார்பட்டில் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அவரை, திடீரென ஒரு பெண் இழுத்தார்.
ஒரு கணம் அதிர்ந்து போன ஜூலி பின்னர் சுதாரித்துக் கொண்டார். அந்த பெண்ணின் பிடியில் இருந்து தன்னை விடுவித்துக்கொள்ள முயன்றபோது அவர் அதிர்ச்சியில் உணர்விழந்து காணப்பட்டார் என்று இதை நேரில் பார்த்த ஒருவர் தெரிவித்தார்.
பின்னர் அந்தப் பெண்ணை ஜூலியின் மெய்க்காப்பாளர்கள் அங்கிருந்து இழுத்துக் கொண்டு போய் விட்டனர்.
ஏற்கனவே டோக்கியோ விழாவுக்கு ஜூலி போயிருந்தபோது அவரது உடல்நலம் குறித்து ரசிகர்கள் கவலையுடன் காணப்பட்டனர். இந்தநிலையில் ஜூலியைத் தாக்க ஒரு பெண் முயன்ற சம்பவம் ரசிகர்களை மேலும் கவலைக்குள்ளாக்கியுள்ளது.
Comments
angelina jolie angelina jolie attacked ஏஞ்சலினா ஜூலி ஏஞ்சலினா ஜூலி தாக்கப்பட்டார் சால்ட் பட வெளியீட்டு விழா salt movie premiere


Click it and Unblock the Notifications