'மதர்' ஆசை.. மாடலிங்கை விடும் நவோமி!

உலகின் முதல் கருப்பர் இன சூப்பர் மாடல் என்ற பெருமைக்குரியவர் நவோமி கேம்ப்பெல். சிறிய வயதிலேயே மாடல் அழகியாக மாறியவர். விரைவிலேயே சூப்பர் மாடல் அழகி என்ற அந்தஸ்துக்கும் உயர்ந்தார்.
தற்போது ரஷ்யாவைச் சேர்ந்த தொழிலதிபர் விலாடிஸ்லோவை காதலித்து வருகிறார். காதலை கல்யாணமாக்கி, குடும்பம் நடத்தும் ஆசை வந்து விட்டதாம் நவோமிக்கு.
எனவே விரைவில் மாடலிங்குக்கு குட்பை சொல்லப் போவதாக கூறியுள்ளார் நவோமி.
இதுகுறித்து அவர் கூறுகையில், அடுத்த ஆண்டு எனக்கு, மாடலிங்குக்கு வந்து 25 வருடங்களாகும். ஆனால் இது எனக்குப் போதும் என்று தோன்றுகிறது.
நானும் பெண்தான். எனக்கும் தாயாகும் ஆசை வந்து விட்டது என்றார் நவோமி.
இங்கிலாந்தைச் சேர்ந்த நவோமி சமீபத்தில் இந்தியாவில் நடந்த ஒரு பேஷன் ஷோவில் கலந்து கொண்டு பூணை நடை போட்டார்.
மேலும், சுஷ்மிதா சென், ரந்தீப் ஹூடா ஆகியோர் நடித்த கர்மா அன்ட் ஹோலி என்ற படத்திலும் நடித்துள்ளார் என்பது நினைவிருக்கலாம்.
சூப்பர் மாடல் நவோமி, சூப்பர் 'மதராக' விளங்க வாழ்த்துவோம்..


Click it and Unblock the Notifications











