twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சீனாவில் ஷரோன் படங்களுக்கு தடை

    By Staff
    |

    Sharon Stone
    திபெத்தியர்களின் சாபம்தான் சீனா இன்று பூகம்பத்தால் பேரிழப்பை சந்தித்துள்ளது என்று கூறிய ஹாலிவுட் கவர்ச்சிக் கன்னி, ஷரோன் ஸ்டோனின் பேச்சால் அதிருப்தி அடைந்த சீன திரைப்பட நிறுவனம், அவரது படங்களுக்கு தடை விதித்துள்ளது.

    50 வயதாகும் ஷரோன் ஸ்டோன், 'பேசிக் இன்ஸ்டிக்ட்' படத்தில் கலக்கியவர். மே 12ம் தேதி சீனாவில் நடந்த மிகப் பெரிய பூகம்பம் குறித்து கடந்த வாரம், கேன்ஸ் திரைப்பட விழாவில் அவர் ஒரு பேட்டி அளித்திருந்தார்.

    அப்போது, திபெத்தியர்களை சீனர்கள் நடத்தும் விதத்தை நான் ரசிக்கவில்லை. ஒருவர் மீது இன்னொருவர் துவேஷம் காட்டுவது தவறு என்று நான் நினைக்கிறேன்.

    சீனா செய்த பாவம்தான், தற்போது அது பூகம்பத்தை சந்தித்துள்ளதற்குக் காரணம் என்று நான் நினைக்கிறேன். நாம் மற்றவர்களுக்கு தீங்கிழைத்தால் நமக்கும் அதுவே நேரும் இல்லையா? என்று கூறியிருந்தார்.

    ஷரோன் ஸ்டோனின் இந்தக் கருத்துக்களால் சீனாவின் முன்னணி திரைப்பட நிறுவனம் அதிருப்தி அடைந்துள்ளது. ஷரோன் ஸ்டோனின் திரைப்படங்கள் எதுவும் இனிமேல் சீனாவில் திரையிடப்பட மாட்டாது என்று அது அறிவித்துள்ளது.

    இதுகுறித்து ஹாங்காங் திரைப்பட தயாரிப்பாளர்கள் சம்மேளனத்தின் தலைவரும், சீனாவின் முன்னணி திரையரங்க வளாகமான யுஎம்இ சினிப்ளெக்ஸின் நிறுவனமாஐன நெக் சீ யூயென் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து யூயென் கூறுகையில் இது பொருத்தமற்ற, தேவையற்ற பேச்சு. இயற்கைக் சீரழிவு குறித்து இப்படிக் கருத்து கூறுவது கண்டனத்துக்குரியது. 50 லட்சம் சீனர்கள் வீடுகளை இழந்து துயருற்ற நிலையில் இருக்கும்போது ஷரோன் ஸ்டோன் இப்படிப் பேசியிருப்பது எங்களை வருத்தமடைய வைத்துள்ளது.

    எங்களது திரையரங்கங்களில் இனிமேல் ஷரோன் ஸ்டோனின் திரைப்படங்களை திரையிடுவதில்லை என்று முடிவு செய்துள்ளோம் என்றார் யூயென்.

    யுஎம்இ சினிப்ளெக்ஸ் நிறுவனத்திற்கு பீஜிங், ஷாங்காய், சாங்கிங், ஹாங்ஷோ, குவாங்ஷோ ஆகிய சீனாவின் பெருநகரங்களில் ஏராளமான திரையரங்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்தத் தடை குறித்து ஷரோன் ஸ்டோன் இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X