படமாகும் 'டின்டின்' கதை
புகழ் பெற்ற கார்ட்டூன் கதாபாத்திரமான டின்டின் திரைப்பட கதாபாத்திரமாக உருவெடுக்கிறது. பிரபல இயக்குநர் ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் டின்டின் கதாபாத்திரத்தை வைத்து திரைப்படம் எடுக்கவுள்ளார்.
கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக உலகப் புகழ் பெற்ற கார்ட்டூன் கதாபாத்திரம்தான் டின்டின். பெல்ஜியம் நாட்டைச் ேசர்ந்த கார்ட்டூனிஸ்ட் ஜியார்ஜஸ் பிராஸ்பர் ரெமி என்பவர் உருவாக்கிய கேரக்டர்தான் டின்டின். இவனுடைய நிக் நேகம் ஹெர்க் என்பதாகும்.
ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் இந்தக் கதாபாத்திரத்தை வைத்துப் படம் எடுக்கவுள்லார். 2010ம் ஆண்டு டின்டின் படம் திரைக்கு வருகிறது.
இங்கிலாந்தைச் சேர்ந்த 17 வயது சிறுவன் தாமஸ் சாங்க்ஸ்டர்பி டின்டின் கேரக்டரில் நடிக்கவுள்ளான்.
டின்டின் கதாபாத்திரத்ைத வைத்து மொத்தம் 3 படங்களை எடுக்கத் திட்டமிட்டுள்ளார் ஸ்பீல்பெர்க். முதல் படம் 2010ல் வெளியாகிறது.
இப்படம் தொடர்பாக தி லார்ட் ஆப் தி ரிங்ஸ், கிங் காங் ஆகிய படங்களிந் இயக்குநர் பீட்டர் ஜேக்சனுடன் பேசி வருகிறார் ஸ்பீல்பெர்க்.
இதுகுறித்து ஸ்பீல்பெர்க் கூறுகையில், டின்டின்னின் சாகசங்களை திரைப்படமாக கொடுக்க தீர்மானித்துள்ளேன். கார்ட்டூனில் இருக்கும் அதே விறுவிறுப்பு படத்திலும் இருக்கும்படி கவனம் செலுத்தப் போகிறேன்.
இது கார்ட்டூன் படம் போலவும் இருக்காது, அனிமேஷன் படம் போலவும் இருக்காது. போட்டோ ரியாலிஸ்டிக்காக படம் இருக்கும் வகையில் பார்த்துக் கொள்வோம் என்றார் ஸ்பீல்பெர்க்.
உலகம் முழுவதும் 20 கோடி டின்டின் கார்ட்டூன் புத்தகங்கள் இதுவரை விற்பனையாகி சாதனை படைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications