மீண்டும் நடிக்கிறார் அர்னால்டு!

By Sudha

Arnold
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாண கவர்னராக உள்ள அர்னால்ட் ஷ்வார்ஸ்நேக்கர் விரைவில் மீண்டும் சினிமாவில் நடிக்கப் போவதாக கூறியுள்ளார்.

ஹாலிவுட்டின் சூப்பர் ஸ்டாராக கொடிகட்டிப் பறந்தவர் அர்னால்ட். கமாண்டோ, ட்ரூ லைஸ், டோடல் ரீகால், டெர்மினேட்டர் 1, 2 மற்றும் 3 உள்ளிட்ட பிளாக்பஸ்டர் படங்களில் நடித்தவர் அர்னால்ட்.

சினிமாவில் உச்சத்தில் இருந்தபோதே, கலிபோர்னியா மாகாண கவர்னராக வெற்றி பெற்று பதவியில் அமர்ந்தார். கடந்த 7 ஆண்டுகளாக இந்தப் பதவியை வகித்து வந்தார். அடுத்த இருமாதங்களில் அவர் பதவிக்காலம் முடிகிறது.

மீண்டும் அவர் கவர்னர் பதவிக்கு போட்டியிட முடியாது என்பதால், செனட்டராக பதவி ஏற்பார் என்றும், ஒபாமா நிர்வாகத்தில் சுற்றுச் சூழல் அமைச்சராக பொறுப்பேற்பார் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், மீண்டும் சினிமாவில் நடிப்பீர்களா என்று அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதலளித்த அவர், "நல்ல கதை, பொருத்தமான வேடம் அமைந்தால் நடிப்பேன். ஆனால் முன்பு போல 6 மாத காலம் தொடர்ந்து ஷூட்டிங்கில் என்னால் இருக்க முடியுமா என்று தெரியவில்லை", என்று கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X