சினிமாவில் குதித்த கார்லா ப்ரூனி

இத்தாலியைச் சேர்ந்தவர் ப்ரூனி. இவர் முன்பு சூப்பர் மாடலாக இருந்தவர். பாடகியாகவும் இருந்துள்ளார். சர்கோஸியை மணந்த பின்னர் இவை எதிலும் அவர் ஈடுபடவில்லை. இந்த நிலையில் 42 வயதாகும் ப்ரூனி நடிகையாகியுள்ளார்.
மிட்நைட் இன் பாரீஸ் என்ற படத்தில் அவர் நடிக்கிறார். இப்படத்தை உட்டி ஆலன் இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. காதலும், காமெடியும் இணைந்த படமாம் இது. ப்ரூனிக்கு ஜோடியாக ஹாலிவுட் நடிகர் ஓவன் வில்சன் தலை காட்டுகிறார்.
பாரீஸ் நகரில் ஒரு முக்கிய பகுதியில் உள்ள தெருக்களில் நடந்த ஷூட்டிங்கின்போது படு ஸ்டைலான கெட்டப்பில் வந்து நடித்த ப்ரூனியைப் பார்த்து பாரீஸ் மக்கள் வியந்தபடி ரசித்தனர்.
கவர்ச்சியிலும், போஸ் கொடுப்பதிலும் கில்லாடியான ப்ரூனிக்கு நடிப்பு இன்னும் கை கூடவில்லை. ஒரு காட்சியைப் படமாக்க அவருக்கு 35 டேக்குகள் பிடித்தன. இருந்தாலும் சளைக்காமல் அவரது காட்சியைப் படமாக்கினார் உட்டி ஆலன். ஓவன் வில்சனும், ப்ரூனிக்கு நிறைய டிப்ஸ்களைக் கொடுத்தபடியே இருந்தார்.


Click it and Unblock the Notifications











