'ரியாலிட்டி'க்கு மாறும் எலிசபெத்!

By Staff

Elizabeth Hurley
இந்தியரான அருண் நாயரை மணந்துள்ள ஹாலிவுட் மாடல் கம் நடிகையான எலிசபெத் ஹர்லி, டிவி ஒன்றுக்காக தனது க்ளவ்செஸ்டர் பண்ணை இல்லத்தில் ஒரு ரியாலிட்டி ஷோவை நடத்தத் திட்டமிட்டுள்ளார்.

43 வயதாகும் எலிசபெத் மாடல் அழகியாக இருந்து நடிகையானவர். இந்தியரான அருண் நாயரைத் திருமணம் செய்துள்ளார். தற்போது தனது கணவருடன் இணைந்து 400 ஏக்கர் பரப்பளவிலான தனது பண்ணை இல்லத்தில் டிவி ரியாலிட்டி ஷோ ஒன்றை நடத்தத் திட்டமிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், நான் எப்போதும் அழகிய கூந்தலுடன், எழிலுற காணப்படுவேன் என்று எனது ரசிகர்கள் நினைக்கிறார்கள், விரும்புகிறார்கள். ஆனால் அப்படி நான் நினைக்கவில்லை. எப்போதும் அப்படியே இருக்க முடியாதே.

என்னை முதல் முறையாக பார்த்த எனது கணவர் கூட என்னைப் பார்த்து ஆச்சரியப்பட்டார். நான் நினைத்த எலியா நீ என்று வியப்பை வெளியிட்டார். ஆனால் ஆங்கிலேயர்களா நாங்கள் எல்லாம் அப்படித்தான். இயல்பாக இருப்பதையே விரும்புகிறோம்.

நானும், எனது கணவரும் சேர்ந்து ரியாலிட்டி ஷோவை நடத்த திட்டமிட்டு வருவது உண்மைதான். இன்னும் விரிவாக விவாதிக்க வேண்டியுள்ளது. விரைவில் சொல்கிறேன் என்கிறார் ஹர்லி.

ஷில்பா 'டிரை' பண்ணிப் பார்க்கலாமே!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X