twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஜாக்சன் படம்..ஒரே நாள்..20 மில்லியன் டாலர்

    |

    Michael Jacksons This Is It
    மைக்கேல் ஜாக்சனின் கடைசி நேர இசை ஒத்திகைகளை தொகுத்து உருவாக்கப்பட்டுள்ள 'திஸ் இஸ் இட்' என்ற டாக்குமென்டரி படத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. திரையிட்ட முதல் நாளிலேயே 20 மில்லியன் டாலரை அள்ளி விட்டதாம்.

    கடந்த ஜூன் மாதம் யாரும் எதிர்பாராத நேரத்தில் மரணமடைந்தார் ஜாக்சன். ஆனால் அதற்கு சில நாட்களுக்கு முன்பு வரை ஒத்திகையில் ஈடுபட்டிருந்தார் ஜாக்சன்.

    திஸ் இஸ் இட் என்ற பெயரில் நடத்தவிருந்த இசை பயணத்திற்கான ஒத்திகை இது. தற்போது இந்த ஒத்திகை நிகழ்ச்சிகளை அப்படியே டாக்குமென்டரியாக்கி திஸ் இஸ் இட் என்ற பெயரிலேயே திரையிட்டுள்ளனர்.

    ஆனால் இது ஜாக்சனுக்கு புகழ் சேர்க்கும் படம் இல்லை. மாறாக காசு பார்க்கும் வேலை. எனவே இதை புறக்கணிப்போம் என்று பெருவாரியான ஜாக்சன் ரசிகர்கள் அறிவித்திருந்தனர். அப்படியும், இப்படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாம்.

    உலகம் முழுவதும் திரையிட்ட முதல் நாளிலேயே இப்படத்திற்கு 20.1 மில்லியன் டாலர் பணம் வசூலாகியுள்ளதாம்.

    சர்வதேச அளவில் இப்படத்திற்கு 12.7 மில்லியன் டாலரும், அமெரிக்காவில் 7.4 மில்லியன் டாலரும் வசூலாகியுள்ளதாம்.

    கிட்டத்தட்ட 100 மணி நேரம் ஜாக்சன் நடத்திய ஒத்திகைகளைத் தொகுத்து 90 நிமிடப் படமாக்கியுள்ளது சோனி பி்க்சர்ஸ் நிறுவனம்.

    சமீபத்தில்தான் போர்ப்ஸ் இதழ், இந்த ஆண்டில் அதிகம் சம்பாதித்த மரணமடைந்த பிரபலங்களில் ஜாக்சன் முதலிடம் பிடித்துள்ளதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டில் ஜாக்சனுடைய சம்பாத்தியம் 90 மில்லியன் டாலர்களாகும். இதில் 72 மில்லியன் டாலர் வருவாய் அவரது மரணத்திற்குப் பின்னர் வந்ததாகும். அதாவது இசை வடிவங்கள் உள்ளிட்டவற்றின் விற்பனை மூலம்.

    இதற்கிடையே, இண்டியானாவின் கேரி நகரில் ஜாக்சனுக்கு நினைவு அருங்காட்சியகம் ஒன்றைக் கட்டப் போவதாக அவரது தந்தை ஜோ ஜாக்சன் கூறியுள்ளார். கேரிதான் ஜாக்சன் பிறந்த ஊராகும்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X